சத்யராஜின் டைட்டிலை பிடித்த விக்ரம் பிரபு: அர்ஜுன், ஜாக்கி ஷெராப்புடன் கூட்டணி
சென்னை: விக்ரம் பிரபு அடுத்ததாக வால்டர் என்ற படத்தில் நடிக்கிறார்.
வால்டர் என்ற பெயர் சினிமாவுக்கு புதிதில்லை. ஆங்கிலத்திலும் வால்டர் என்ற தலைப்பில் படம் வந்திருப்பதைப் போல தமிழில், சத்யராஜ் நடிப்பில் வெளியான வால்டர் வெற்றிவேல் திரைப்படமும் வெற்றி பெற்றது.

அந்த வரிசையில் இப்போது விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படத்திற்கு வால்டர் என தலைப்பு வைத்துள்ளனர். தயாரிப்பாளர் சிங்காரவேலன் கழுகு 2 திரைப்படத்திற்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தை அன்பரசன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தில் அர்ஜுன், ஆரண்ய காண்டம் படத்தில் வில்லனாக கலக்கிய பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு க்ரைம் நாவல் மன்னனான ராஜேஷ்குமார் கதை எழுதுகிறார், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். படம் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிவித்த படக்குழுவினர், இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிப்பதாக தற்போது அறிவித்துள்ளனர்.
வால்டர் திரைப்படத்திற்கு, பேராண்மை, பூலோகம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவி செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். அர்ஜுன் ரெட்டி திரைப்பட புகழ் ரதன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











