விஜய் ட்ரெஸ் கோடில் வந்த விக்ரம்.. ஆத்தாடி இவ்வளவு ரூபாய் செலவா?.. சியான் வேற லெவல் பாஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நேற்று சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது அவர் வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார். அரசியலில் விஜய் பயன்படுத்தும் ட்ரெஸ் கோட் இது என்பதால்; சியான் விக்ரம் கண்டிப்பாக விஜய்க்குதான் வாக்களித்திருப்பார் என்பது தவெகவினரின் தியரி. இந்நிலையில் அவர் அணிந்திருந்த சட்டை, பேண்ட், கூலிங் கிளாஸ் ஆகியவைகளின் விலை குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இத்தனை வருடங்களாக அதிகபட்சம் தமிழ்நாடு மும்முனை போட்டியைத்தான் சந்தித்திருக்கிறது. இந்த முறையோ நான்கு முனை போட்டியை சந்தித்தது. காரணம் விஜய். அவர் கட்சி ஆர்மபித்து திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டே இந்தத் தேர்தலை சந்தித்தார். தன்னை சுற்றி எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் நம்பிக்கையோடு அவர் இருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

செலிபிரிட்டிகள் வாக்குகள்: இந்தத் தேர்தலில் மக்களிடமும் வாக்களிப்பதற்கான ஆர்வத்தை பார்க்க முடிந்தது. பலரும் தங்களது சொந்த ஊருக்கு பேருந்து கிடைக்கவில்லை என்றாலும் எப்படியோ சென்று சேர்ந்து தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டார்கள். சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்திவிட்டார்கள். தங்கள் துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்க்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பதில் தவெகவினரின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
விஜய் ட்ரெஸ் கோட்: அதேபோல் நேற்றைய வாக்குப்பதிவின்போது பலரும்; தேர்தல் பரப்புரையின்போது விஜய் அணிந்திருந்த வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்டை அணிந்து வந்திருந்தார்கள். ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் பத்து பேரையாவது அப்படி பார்க்க முடிந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளில்கூட சிலர் அந்த ட்ரெஸ் கோடில் வந்தார்கள். அவர்களில் சியான் விக்ரமும் ஒருவர். அவர் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்டில் வந்ததை பார்த்து கண்டிப்பாக சியானின் ஓட்டு தளபதி கட்சிக்குதான் விழுந்திருக்கும் என்பது தவெக விர்ச்சுவர் வாரியர்ஸின் தியரியாக இருக்கிறது.
விக்ரம் ட்ரெஸ்ஸின் விலை: இந்நிலையில் விக்ரம் நேற்று அணிந்து வந்த சட்டை, பேண்ட், கூலிங் கிளாஸ் ஆகியவையின் விலை குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் அணிந்திருந்த சட்டை Tommy Hilfiger பிராண்டை சேர்ந்தது. அதன் விலை 3,033 ரூபாய் ஆகும். அவர் அணிந்திருந்த காக்கி பேண்ட் Gap என்ற பிராண்டை சேர்ந்தது. அதன் விலை 2,500 ரூபாயாகும். மேலும் அவர் அணிந்திருந்த Tom Ford கூலிங் கிளாஸ் 37,000 ரூபாய் ஆகும்.
விக்ரமின் லைன் அப்: விக்ரமின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக அவர் போடி ராஜ்குமார் இயக்கத்திலும், ஆனந்த் சங்கர் இயக்கத்திலும் தலா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, சியான் ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications