மாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...!
சாமி 2 படமும் சீமராஜா படமும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரே நாளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் விக்ரமின் சாமி 2வும், சிவகார்த்திகேயனின் சீமராஜாவும் ஒரே நாளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி 2ம் பாகத்தை ஹரி இயக்கியுள்ளார். சாமி முதல் பாகத்தை போலவே இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாமி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதிக்கு பிறகு ரிலீஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், சீமராஜாவுக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் சாமி 2வும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இருபடங்களும் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விக்ரமுடன் சிவகார்த்திகேயன் மோதுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications