Actor Vikram: இயக்குநர் லிங்குசாமிக்கு கை கொடுக்கிறாரா நடிகர் விக்ரம்?
சென்னை: இயக்குநர் லிங்குசாமி அஜித், மாதவன், சூர்யா, விஷால், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டெல்லாம் கொடுத்த இயக்குநர். இப்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கார்.
நடிகர் சூர்யாவை ரொம்ப நம்பி அஞ்சான் படம் எடுத்தார். படம் என்னவோ பார்க்க கலர் ஃபுல்லா இருந்துச்சு.மக்களிடம் இந்த படம் எடுபடலை. இந்த படத்தை எடுத்து முடிக்கும் போது சூர்யாவின் மார்க்கெட் டல்லாக இருந்தது கூட படத்தின் தோல்விக்கு ஒரு காரணம்னு சொல்லலாம்.
விஷாலை வச்சு அஞ்சானை விட நம்பிக்கையா சண்டக்கோழி 2 படத்தை எடுத்தார்.கேட்கணுமா மாபெரும் தோல்வி.மனிதர் விரக்தியின் உச்சத்தில் இருக்கார்.

லாரன்ஸ் லிங்குசாமி
லிங்குசாமி நிலையை தெரிஞ்சுக்கிட்ட லாரன்ஸ் மாஸ்டர் நான் உங்களுக்கு உடனடியா ஒரு படம் பண்ணி தரேன்... உங்க ஸ்டைல் படியே கதையை தயார் பண்ணுங்க. என்னை மனசுல வச்சுக்கிட்டு கதை பண்ண வேணாம்னு சொன்னாராம்.ரொம்ப சந்தோசம் அடைஞ்ச லிங்குசாமி கதையை தயார் செய்துகிட்டு இருக்கறதா சொல் கேள்வி.

விக்ரம் லிங்குசாமி
லிங்குசாமியின் நிலையை அறிந்த விக்ரமும் தன் பங்குக்கு லிங்குசாமியை சந்திச்சு நான் உங்களுக்கு ஒரு படம்பண்ணித் தரேன்னு சொன்னாராம். ஏற்கனவே பீமா படத்தை விக்ரமை வச்சு எடுத்தவர் லிங்குசாமி. அதோட விக்ரம் இப்போது ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்கள் என்று நடிக்கும் முடிவை எடுத்து நடித்தும் வருகிறார்.

ஷங்கரின் அந்நியன்
விக்ரம் தூள் போன்ற படங்களில் நடித்து பல ஹிட் கொடுத்து பீக்கில் இருந்த சமயம் இயக்குநர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடிக்க கை எழுத்திட்டார். இந்த ஒரே படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்து, பல பட வாய்ப்புக்களை இழந்தார். இவரது வாய்ப்புக்கள் நடிகர் சூர்யாவுக்கு போனதாகக் கூட சொல்வதுண்டு.

கிடைக்கும் படங்களில்
இப்போது அப்படி இருக்காமல் பல படங்களிலும் நடிக்க காலம் கடந்து யோசிச்சு, இப்போது மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகி இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடக்க அதில் நடிச்சுட்டு வர்றார். இந்த நேரத்தில்தான் லிங்குசாமியிடமும் கதையை தயார் பண்ண சொல்லி இருக்கார் விக்ரம். லாரன்ஸை வைத்து படம் எடுக்கறது, விக்ரமை வச்சும் படம் எடுக்கறதுன்னு என்று தெளிவான முடிவில் இருக்காராம் லிங்குசாமி.


Click it and Unblock the Notifications











