விக்ரமுடன் இணையும் 96 பிரேம்குமார்.. வெளியான சூப்பர் அப்டேட்.. ஹிட் உறுதியா?

சென்னை: நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான், வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் தோல்வியைத்தான் சந்தித்தன. இதனால் அவர் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் இருக்கிறார். அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர்; இப்போது 96, மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

Vikram to star in new film under 96 Premkumar Direction Here are Details
Photo Credit:

வரிசையாக தோல்விகள்: சிறந்த நடிகர் என்று பெயரை பெற்று; பல ஹிட் படங்களை கொடுத்தாலும் கடந்த சில வருடங்களாகவே தோல்வி முகத்தைத்தான் பார்த்துவருகிறார். பெரிய எதிர்பார்ப்போடு அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்தார். வழக்கம்போல் தன்னுடைய முழு உழைப்பு, திறமையை போட்டு நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

வீர தீர சூரன்: அந்தப் படம்தான் தோல்வியடைந்துவிட்டது; சித்தா இயக்குநர் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன் படம் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது. இதனால் வரது ரசிகர்கள் அப்செட்டின் உச்சத்துக்கே சென்றார். எந்தப் படத்தில் நடித்தாலும் க்ளிக் ஆகவில்லையே என்று வேதனையும் தெரிவித்துவருகிறார்கள்.

புதிய படங்கள்: எப்படியாவது தரமான கமர்ஷியல் வெற்றியை கொடுத்து சியான் கம்பேக் கொடுக்க வேண்டுமென்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதற்கு தகுந்தபடிதான் விக்ரமும் கதைகளை தேர்ந்தெடுத்துவருகிறார். அந்தவகையில் மண்டேலா, மாவீரன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர்.

செம சர்ப்ரைஸ்: இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது 96, மெய்யழகன் ஆகிய இரண்டு க்ளாசிக் படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் விக்ரம். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. படத்தில் வேறு யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படமாவது விக்ரமுக்கு ஹிட் படமாக அமையுமா என்ற ஆவலோம் சியான் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X