ஷங்கருக்காக ரஜினிக்கு வில்லன் ஆகும் 'சீயான்' விக்ரம்?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள எந்திரன் 2 படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஷங்கர்.
இந்நிலையில் அவர் ஐ பட வேலைகளில் ஆண்டுக் கணக்கில் பிசியானதால் எந்திரன் 2 வேலைகளை துவங்க முடியவில்லை. ஐ ரிலீஸானதை அடுத்து எந்திரன் 2 படத்தை துவங்க உள்ளார் ஷங்கர்.

ஆமீர் கான்
உடல் நலம் காரமணாக எந்திரன் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.

இந்தியிலும்
ஆமீர் கானை வைத்து எந்திரன் 2 படத்தை எடுத்து அதை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆமீர் கான் பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியே
தற்போது எந்திரன் 2 படத்தில் ஆமீர் கான் அல்ல ரஜினி தான் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரமை தேர்வு செய்துள்ளார்களாம்.

ரஞ்சித்
ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகே எந்திரன் 2 படத்தில் நடிப்பாராம். ரஜினிக்கு ஏற்ற ஹீரோயினை ஷங்கர் தேடிக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











