விஜய்யை இயக்க ஆசைப்படும் சீயான் விக்ரம்: இல்லாட்டி...
சென்னை: சீயான் விக்ரம் இளைய தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறார்.
பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு கோலிவுட்டின் முன்னணி நடிகரானவர் விக்ரம். கடின உழைப்புக்கு பெயர் போனவர். அவர், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இருமுகன் படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.

விக்ரம் நடிப்பது தவிர பிற நடிகர்களுக்காக டப்பிங்கும் பேசியுள்ளார். இந்நிலையில் அவருக்கு இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஆசை வந்துள்ளது. இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகும் போது நடிகர்களுக்கு இயக்குனராகும் ஆசை வருவதை குறைகூற முடியாது.
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் விக்ரம் கூறுகையில்,
நான் தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். இளையதளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்க வேண்டும். அவர் பிசியாக இருந்தால் ஜெயம் ரவியை ஹீரோவாக்க வேண்டும் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications