விக்ரமின் உல்டா படம்! விக்ரம் ரொம்ப எரிச்சலில் இருக்கிறார்.கடைசியாக நடித்த மஜா ஓடாத நிலையில், இன்னும் நல்ல கதை கிடைக்காததால் மாதக் கணக்கில் வீட்டில் சும்மாஇருந்தார். இப்போது தான் லிங்குசாமி இயக்கத்தில் பீமா படத்தின் கதை ஒருவழியாக டெவலப் ஆகி சூட்டிங்ஆரம்பிக்கவுள்ளது.நல்ல கதை அமையாமல் வீட்டில் இருந்த விக்ரமை இந்தி, தெலுங்கு அழைத்துப் பார்த்தது. அதில் இந்திப்படத்தில் அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதை விக்ரம் மறுத்தார்.அதே போல தெலுங்கில் பக்கா ஆக்ஷன் படங்களுக்கு கதையை ரெடி செய்து கொண்டு ஸார்.. இந்தாங்க என்றுகோடிகளை பொட்டிகளில் அடுக்கி எடுத்து வந்த தயாரிப்பாளர்களிடம், இப்போ தெலுங்கு வேண்டாம்..அப்புறம் பண்றேன் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார் சீயான்.நல்ல கதை இருந்தா தவிர எவ்வளவு கொடுத்தாலும் அதில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கும் விக்ரம்,கதை தேடலில் தீவிரமாகி லிங்குசாமிக்கு மட்டுமே ஓ.கே. சொன்னார். பீமா அல்லது புயல் என்ற பெயரில்வெளியாகப் போகிறது அந்தப் படம்.அதைத் தொடர்ந்து பேரரசுவின் இயக்கத்தில் ஒரு படம் (சென்னை அல்லது பரமகுடி என்ற பெயர்சூட்டுவார்களாம்), அடுத்து அரவாணி ரோலில் ஒரு படம் (மலையாள ரீமேக்) செய்ய இருக்கிறார் விக்ரம். இந் நிலையில் எப்பவோ ஒரு காலத்தில் சான்ஸ் இல்லாமல் இருந்தபோது தெலுங்கில் விக்ரம் நடித்த துக்கடாபடங்களை எல்லாம் இப்போது உல்டா (டப்பிங்) செய்து தமிழில் தள்ளிவிட உள்ளார்களாம்.அந்த வகையில் ஆறுச்சாமி என்ற பெயரில் ஒரு படம் வரப் போகிறது. அதில், ஜென்டில் மேன் படத்தில் செகண்ட்ஹீரோயினாக வந்து செந்திலுடன் டிக்கிலோனா விளையாடிய சுபஸ்ரீ தான் விக்ரமுக்கு ஜோடியாகநடித்திருந்தார்.படத்தை இயக்கியது விசு, எஸ்.வி.சேகர் வகையறாவைச் சேர்ந்த மெளலி. அக்கா பாகுன்னாவா என்ற தெலுங்குப்படம் தான் இப்போது ஆறுச்சாமி என்று உருவம் எடுக்கப் போகிறது. அக்கா வீட்டுக்காரர் ரூபத்தில் புகுந்து ஹீரோயின் குடும்பத்தில் குழப்பம் செய்யும் வில்லனுக்கு ஆப்பு வைக்கும்கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார்.இந்தப் படத்தையும் இன்னொரு தெலுங்குப் படத்தையும் இப்போது டப் செய்து வெளியிடப் போகிறார்களாம்.

By Staff

விக்ரம் ரொம்ப எரிச்சலில் இருக்கிறார்.

கடைசியாக நடித்த மஜா ஓடாத நிலையில், இன்னும் நல்ல கதை கிடைக்காததால் மாதக் கணக்கில் வீட்டில் சும்மாஇருந்தார். இப்போது தான் லிங்குசாமி இயக்கத்தில் பீமா படத்தின் கதை ஒருவழியாக டெவலப் ஆகி சூட்டிங்ஆரம்பிக்கவுள்ளது.

நல்ல கதை அமையாமல் வீட்டில் இருந்த விக்ரமை இந்தி, தெலுங்கு அழைத்துப் பார்த்தது. அதில் இந்திப்படத்தில் அமிதாப்புடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதை விக்ரம் மறுத்தார்.

அதே போல தெலுங்கில் பக்கா ஆக்ஷன் படங்களுக்கு கதையை ரெடி செய்து கொண்டு ஸார்.. இந்தாங்க என்றுகோடிகளை பொட்டிகளில் அடுக்கி எடுத்து வந்த தயாரிப்பாளர்களிடம், இப்போ தெலுங்கு வேண்டாம்..அப்புறம் பண்றேன் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார் சீயான்.

நல்ல கதை இருந்தா தவிர எவ்வளவு கொடுத்தாலும் அதில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கும் விக்ரம்,கதை தேடலில் தீவிரமாகி லிங்குசாமிக்கு மட்டுமே ஓ.கே. சொன்னார். பீமா அல்லது புயல் என்ற பெயரில்வெளியாகப் போகிறது அந்தப் படம்.

அதைத் தொடர்ந்து பேரரசுவின் இயக்கத்தில் ஒரு படம் (சென்னை அல்லது பரமகுடி என்ற பெயர்சூட்டுவார்களாம்), அடுத்து அரவாணி ரோலில் ஒரு படம் (மலையாள ரீமேக்) செய்ய இருக்கிறார் விக்ரம்.


இந் நிலையில் எப்பவோ ஒரு காலத்தில் சான்ஸ் இல்லாமல் இருந்தபோது தெலுங்கில் விக்ரம் நடித்த துக்கடாபடங்களை எல்லாம் இப்போது உல்டா (டப்பிங்) செய்து தமிழில் தள்ளிவிட உள்ளார்களாம்.

அந்த வகையில் ஆறுச்சாமி என்ற பெயரில் ஒரு படம் வரப் போகிறது. அதில், ஜென்டில் மேன் படத்தில் செகண்ட்ஹீரோயினாக வந்து செந்திலுடன் டிக்கிலோனா விளையாடிய சுபஸ்ரீ தான் விக்ரமுக்கு ஜோடியாகநடித்திருந்தார்.

படத்தை இயக்கியது விசு, எஸ்.வி.சேகர் வகையறாவைச் சேர்ந்த மெளலி. அக்கா பாகுன்னாவா என்ற தெலுங்குப்படம் தான் இப்போது ஆறுச்சாமி என்று உருவம் எடுக்கப் போகிறது.


அக்கா வீட்டுக்காரர் ரூபத்தில் புகுந்து ஹீரோயின் குடும்பத்தில் குழப்பம் செய்யும் வில்லனுக்கு ஆப்பு வைக்கும்கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார்.

இந்தப் படத்தையும் இன்னொரு தெலுங்குப் படத்தையும் இப்போது டப் செய்து வெளியிடப் போகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X