»   »  மைனர் விக்ரம் விக்ரமின் படங்களுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. மசாலா படங்களை ரொம்பவே விரும்பிச் சுவைக்கும்ஆந்திராவாலாக்கள் மத்தியில் விக்ரமின் தில், சாமி, தூள் போன்ற தமிழ்ப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேநேரத்தில் பிதாமகனும் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது. இதனால் விக்ரமை தெலுங்கில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் பொட்டிகளுடன் வந்து நின்றனர். ஆனால், எந்தவாய்ப்பையும் ஏற்கவில்லை விக்ரம். இந் நிலையில் சமீபத்தில் அபஜித்துடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தியன் மாபெரும் வசூலை அள்ளிக் குவித்துவருகிறது. முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடி பின்னியெடுத்துக்கொண்டிருக்கிறது அபஜித்துடு. தெலுங்கில் மட்டுமல்லாமல் கர்நாடகம், கேரளத்திலும் சக்கை போடு போடுகிறது அந்நியன். இதையடுத்து விக்ரமை தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்திக்கு இழுக்க பெரும் போட்டி நடக்கிறது. அதிலும் சம்பள விஷயத்தில் பெரிய இடமான தெலுங்கு உலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் விக்ரமை இழுத்தேதீருவது என்ற திட்டவட்டமான முடிவில் களமிறங்கியுள்ளனர். அவர்களது தொடர் நச்சரிப்புக்குப் பின் இப்போது நேரடியாகஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விக்ரம். (ஆரம்ப காலத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் தான் விக்ரம். ஆனால், தமிழில் முன்னணிக்கு வந்த பின் தெலுங்கில்ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை) விஜய் நடித்த கில்லியின் மூலப் படமான ஒக்கடுவைத் தயாரித்து, அதன் வரலாறு காணாத வெற்றியால், இப்போதுமில்லியன்களில் புரண்டு வரும் குணசேகர் என்பவர் தான் விக்ரமை தெலுங்குக்குக் கொண்டு செல்கிறார். இதற்காக விக்ரமுக்குமாபெரும் சம்பளத்தைத் தந்துள்ளாராம் குணசேகர். போதும் போதும் என விக்ரம் திணறும் அளவுக்கு சம்பளத்தைப் பேசி,கையில் திணித்திருக்கிறார். இதற்கிடையே, சமீப காலமாக விக்ரமிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை ரசிகர் மன்றங்களுக்கு முக்கியத்துவம் தராமல்இருந்து வந்தவர் இப்போதெல்லாம் வாய் திறந்தால், ரசிகக் கண்மணிகள் என்று வாய் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். அந்நியன் வெற்றிக்கு ஷங்கரும் ரசிகர்களும் சரி சமமான காரணம் என்று கூறும் விக்ரம், நான் நடித்த படத்துக்கு டிக்கெட்கிடைக்காமல் ஏக்கத்துடன் திரும்பிச் செல்லும் ரசிகர்களைப் பார்க்கும்போது, அவர்கள் முகத்துக்கு எதிரே போய் நின்றுசடாரென கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது என்கிறார். நான் உங்களுக்கு என்ன செய்தேன்.. என் மீது ஏன் இப்படி ஒரு அன்பு. உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்என்று ரசிகர்களிடம் போய் உருகி நிற்க வேண்டும் போலிருக்கிறது என்கிறார். இப்போது விக்ரம் நடித்து வரும் மஜா படம் இன்னொரு தூள் மாதிரியாம். அதில், கிராமத்து மைனர் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாள இயக்குனர் ஷாபி டைரக்ட் செய்யும் இந்தப் படத்தில் சியானுக்கு ஆசின் தான் ஜோடி. மலையாளத்தில் வெளியான தொம்மனும் மக்களும் என்ற படம் தான் தமிழில் மஜாவாக ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்கிறது.வேட்டி, பூ போட்ட சட்டை, மொரடு மீசை, கரடு தாடி, நெஞ்சை மறைக்கும் செயின், மதுரை பக்கிட்டு பாஷை என்று புத்தம்புதிய கெட்-அப்பில் வழக்கம் போல கலக்கிக் கொண்டிருக்கிறார் சீயான்.

மைனர் விக்ரம் விக்ரமின் படங்களுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. மசாலா படங்களை ரொம்பவே விரும்பிச் சுவைக்கும்ஆந்திராவாலாக்கள் மத்தியில் விக்ரமின் தில், சாமி, தூள் போன்ற தமிழ்ப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேநேரத்தில் பிதாமகனும் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது. இதனால் விக்ரமை தெலுங்கில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் பொட்டிகளுடன் வந்து நின்றனர். ஆனால், எந்தவாய்ப்பையும் ஏற்கவில்லை விக்ரம். இந் நிலையில் சமீபத்தில் அபஜித்துடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தியன் மாபெரும் வசூலை அள்ளிக் குவித்துவருகிறது. முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடி பின்னியெடுத்துக்கொண்டிருக்கிறது அபஜித்துடு. தெலுங்கில் மட்டுமல்லாமல் கர்நாடகம், கேரளத்திலும் சக்கை போடு போடுகிறது அந்நியன். இதையடுத்து விக்ரமை தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்திக்கு இழுக்க பெரும் போட்டி நடக்கிறது. அதிலும் சம்பள விஷயத்தில் பெரிய இடமான தெலுங்கு உலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் விக்ரமை இழுத்தேதீருவது என்ற திட்டவட்டமான முடிவில் களமிறங்கியுள்ளனர். அவர்களது தொடர் நச்சரிப்புக்குப் பின் இப்போது நேரடியாகஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விக்ரம். (ஆரம்ப காலத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் தான் விக்ரம். ஆனால், தமிழில் முன்னணிக்கு வந்த பின் தெலுங்கில்ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை) விஜய் நடித்த கில்லியின் மூலப் படமான ஒக்கடுவைத் தயாரித்து, அதன் வரலாறு காணாத வெற்றியால், இப்போதுமில்லியன்களில் புரண்டு வரும் குணசேகர் என்பவர் தான் விக்ரமை தெலுங்குக்குக் கொண்டு செல்கிறார். இதற்காக விக்ரமுக்குமாபெரும் சம்பளத்தைத் தந்துள்ளாராம் குணசேகர். போதும் போதும் என விக்ரம் திணறும் அளவுக்கு சம்பளத்தைப் பேசி,கையில் திணித்திருக்கிறார். இதற்கிடையே, சமீப காலமாக விக்ரமிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை ரசிகர் மன்றங்களுக்கு முக்கியத்துவம் தராமல்இருந்து வந்தவர் இப்போதெல்லாம் வாய் திறந்தால், ரசிகக் கண்மணிகள் என்று வாய் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார். அந்நியன் வெற்றிக்கு ஷங்கரும் ரசிகர்களும் சரி சமமான காரணம் என்று கூறும் விக்ரம், நான் நடித்த படத்துக்கு டிக்கெட்கிடைக்காமல் ஏக்கத்துடன் திரும்பிச் செல்லும் ரசிகர்களைப் பார்க்கும்போது, அவர்கள் முகத்துக்கு எதிரே போய் நின்றுசடாரென கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது என்கிறார். நான் உங்களுக்கு என்ன செய்தேன்.. என் மீது ஏன் இப்படி ஒரு அன்பு. உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்என்று ரசிகர்களிடம் போய் உருகி நிற்க வேண்டும் போலிருக்கிறது என்கிறார். இப்போது விக்ரம் நடித்து வரும் மஜா படம் இன்னொரு தூள் மாதிரியாம். அதில், கிராமத்து மைனர் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாள இயக்குனர் ஷாபி டைரக்ட் செய்யும் இந்தப் படத்தில் சியானுக்கு ஆசின் தான் ஜோடி. மலையாளத்தில் வெளியான தொம்மனும் மக்களும் என்ற படம் தான் தமிழில் மஜாவாக ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்கிறது.வேட்டி, பூ போட்ட சட்டை, மொரடு மீசை, கரடு தாடி, நெஞ்சை மறைக்கும் செயின், மதுரை பக்கிட்டு பாஷை என்று புத்தம்புதிய கெட்-அப்பில் வழக்கம் போல கலக்கிக் கொண்டிருக்கிறார் சீயான்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரமின் படங்களுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. மசாலா படங்களை ரொம்பவே விரும்பிச் சுவைக்கும்ஆந்திராவாலாக்கள் மத்தியில் விக்ரமின் தில், சாமி, தூள் போன்ற தமிழ்ப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேநேரத்தில் பிதாமகனும் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது.

இதனால் விக்ரமை தெலுங்கில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் பொட்டிகளுடன் வந்து நின்றனர். ஆனால், எந்தவாய்ப்பையும் ஏற்கவில்லை விக்ரம்.

இந் நிலையில் சமீபத்தில் அபஜித்துடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தியன் மாபெரும் வசூலை அள்ளிக் குவித்துவருகிறது. முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடி பின்னியெடுத்துக்கொண்டிருக்கிறது அபஜித்துடு.


தெலுங்கில் மட்டுமல்லாமல் கர்நாடகம், கேரளத்திலும் சக்கை போடு போடுகிறது அந்நியன். இதையடுத்து விக்ரமை தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்திக்கு இழுக்க பெரும் போட்டி நடக்கிறது.

அதிலும் சம்பள விஷயத்தில் பெரிய இடமான தெலுங்கு உலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் விக்ரமை இழுத்தேதீருவது என்ற திட்டவட்டமான முடிவில் களமிறங்கியுள்ளனர். அவர்களது தொடர் நச்சரிப்புக்குப் பின் இப்போது நேரடியாகஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

(ஆரம்ப காலத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் தான் விக்ரம். ஆனால், தமிழில் முன்னணிக்கு வந்த பின் தெலுங்கில்ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை)


விஜய் நடித்த கில்லியின் மூலப் படமான ஒக்கடுவைத் தயாரித்து, அதன் வரலாறு காணாத வெற்றியால், இப்போதுமில்லியன்களில் புரண்டு வரும் குணசேகர் என்பவர் தான் விக்ரமை தெலுங்குக்குக் கொண்டு செல்கிறார். இதற்காக விக்ரமுக்குமாபெரும் சம்பளத்தைத் தந்துள்ளாராம் குணசேகர். போதும் போதும் என விக்ரம் திணறும் அளவுக்கு சம்பளத்தைப் பேசி,கையில் திணித்திருக்கிறார்.

இதற்கிடையே, சமீப காலமாக விக்ரமிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. இதுவரை ரசிகர் மன்றங்களுக்கு முக்கியத்துவம் தராமல்இருந்து வந்தவர் இப்போதெல்லாம் வாய் திறந்தால், ரசிகக் கண்மணிகள் என்று வாய் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார்.

அந்நியன் வெற்றிக்கு ஷங்கரும் ரசிகர்களும் சரி சமமான காரணம் என்று கூறும் விக்ரம், நான் நடித்த படத்துக்கு டிக்கெட்கிடைக்காமல் ஏக்கத்துடன் திரும்பிச் செல்லும் ரசிகர்களைப் பார்க்கும்போது, அவர்கள் முகத்துக்கு எதிரே போய் நின்றுசடாரென கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது என்கிறார்.

நான் உங்களுக்கு என்ன செய்தேன்.. என் மீது ஏன் இப்படி ஒரு அன்பு. உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்என்று ரசிகர்களிடம் போய் உருகி நிற்க வேண்டும் போலிருக்கிறது என்கிறார்.


இப்போது விக்ரம் நடித்து வரும் மஜா படம் இன்னொரு தூள் மாதிரியாம். அதில், கிராமத்து மைனர் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாள இயக்குனர் ஷாபி டைரக்ட் செய்யும் இந்தப் படத்தில் சியானுக்கு ஆசின் தான் ஜோடி.

மலையாளத்தில் வெளியான தொம்மனும் மக்களும் என்ற படம் தான் தமிழில் மஜாவாக ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்கிறது.வேட்டி, பூ போட்ட சட்டை, மொரடு மீசை, கரடு தாடி, நெஞ்சை மறைக்கும் செயின், மதுரை பக்கிட்டு பாஷை என்று புத்தம்புதிய கெட்-அப்பில் வழக்கம் போல கலக்கிக் கொண்டிருக்கிறார் சீயான்.


Read more about: vikrams maja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil