தெலுங்கு ஹீரோக்களை மிரட்டும் விக்ரம் விக்ரமுக்கு தெலுங்கில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியிருப்பதால் அங்குள்ள முன்னணி ஹீரோக்களம மத்தியில் பெரும் கிலிபரவியுள்ளது.விஜய்காந்தின் அக்ஷன் படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அவை தெலுங்கில் டப் செய்யப்பட்டுநன்றாக ஓடுவதுண்டு. அதே போல ரஜினிக்கும் அங்கு பெரிய மார்க்கெட் உண்டு. இதனால் அவர்களது படங்களின் தெலுங்குரைட்ஸ் பெரிய விலைக்குப் போகும்.ஆனால், இருவருமே நேரடியாக தெலுங்கில் நுழைந்ததில்லை. இதனால் இதுவரை தமிழ் ஹீரோக்களை பெரிய பிரச்சனையாகஅவர்கள் பார்த்தது இல்லை.மிக அரிதாக இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் போன்றவர்கள் தான் தமிழில் இருந்து நேரடியாக தெலுங்கில் நுழைந்து முன்னணிஹீரோக்களை ஆட்டியவர்கள். அவரைத் தவிர தமிழில் இருந்து வேறு யாரும் பெரிய அளவில் அங்கு காலூன்றியதில்லை. அதே நேரத்தில் கன்னடத்தில் இருந்து அர்ஜூன் உள்ளிட்டவர்கள் தெலுங்கில் நேரடியாக நடிப்பதுண்டு. ஆனால், இவர்களுக்குகன்னடத்திலேயே பெரிய மார்க்கெட் கிடையாது என்பதால் அந்த வருகையை தெலுங்கு ஹீரோக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இவர்கள் பெரிய போட்டியும் தந்ததில்லை, அந்த அளவுக்கு கதையிலும் நடிப்பிலும் சரக்கு இருப்பதில்லை.ஆனால், விக்ரம் விஷயத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மத்தியில் பெரும் அச்சம் பரவிக் கிடக்கிறதாம்.நடிப்பிலும் ஆக்ஷனின் ஒரே நேரத்தில் கலக்கி வரும் விக்ரமை தெலுங்குக்குக் கொண்டு போக அங்குள்ள பட அதிபர்கள்போட்டி போட்டு வருகின்றனர். தமிழைவிட பல மடங்கு சம்பளம் தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.விக்ரமின் பிதாமகன் தெலுங்கில் பிரமாதமாக ஓடியது. தில், தூள், சாமி ஆகியவையும் சக்கை போடு போட்டன. அந்நியனோஅபரஜித்துடு என்ற பெயரில் வெளியாகி பல தெலுங்கு ரெக்கார்டுகளை முறியடித்துக் கொண்டு வசூலை அள்ளிக் குவித்துவருகிறது.இதனால் விக்ரமுக்கு அங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதை விக்ரமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்முடிவில் இருக்கிறார்.இப்போது ஆசினுடன் நடித்து வரும் மஜா படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்விக்ரம். மஜா படத்துக்கு அயர்லாந்தில் பாடல் காட்சிகளை எடுக்கும் வேலை மட்டுமே பாக்கியாம். அது முடிந்தவுடன் தெலுங்கில்கால் பதிப்பார் விக்ரம் என்கிறர்கள். குணசேகர் என்ற இயக்குனரின் படத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார். இதற்காக கால்ஷீட்டும் தந்துவிட்டார். ஆனால்,இதை அறிந்த தெலுங்கு பட நாயகன் மகேஷ் பாபு, குணசசேகரை அழைத்து தன்னை வைத்து உடனே ஒரு படம் பண்ணச்சொல்லியிருக்கிறார்.வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டுத் தான் அடுத்த படத்துக்கு வருவது மகேஷ்பாபுவின் ஸ்டைல். ஆனால், இப்போது ஒருபடத்தின் நடித்துக் கொண்டே தன்னை வைத்து அடுத்த படத்தைத் தொடங்குமாறு குணசேகரை நச்சரித்து வருகிறாராம்மகேஷ்பாபு.விக்ரமின் வருகைக்கு முட்டுக் கட்டை போடவே இந்த வேலையில் மகேஷ்பாபு இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இதன்பின்னணியில் வேறு சில முன்னணி தெலுங்கு நடிகர்களும் இருப்பதாக சொல்கிறார்கள்.(குணசேகர் தெலுங்கில் எடுத்த ஒக்கடு படம் தான் சமீபத்தில் அங்கு வசூலில் புதிய வரலாறு படைத்த படம் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது தான் தமிழில் கில்லியாக வெளி வந்து வசூலை வாரிக் குவித்தது.) ஆரம்ப காலத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் தான். ஆனால், இப்போது முன்னணிஹீரோவாகிவிட்ட நிலையில் தெலுங்கில் அவர் கால் பதிப்பது கலர்புல் பேண்ட், அதைவிட கலர்புல்லான சட்டை போட்டுக்கொண்டு, மும்பை ஹீரோயின்களுடன் டான்ஸ் ஆடி, அடிக் குரலில் சத்தம் போட்டு பேசி இதுவரை தெலுங்கு ரசிகர்களை ஏமாற்றிவந்த பல முன்னணி ஹீரோக்களுக்கு பயத்தைத் தந்துள்ளதாம்.இதற்கிடையே இந்தியில் இருந்தும் விக்ரமுக்கு அழைப்பு வர ஆரம்பித்துவிட்டது. சீயான் காட்டில் மஜாவான மழை..

By Staff

விக்ரமுக்கு தெலுங்கில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியிருப்பதால் அங்குள்ள முன்னணி ஹீரோக்களம மத்தியில் பெரும் கிலிபரவியுள்ளது.

விஜய்காந்தின் அக்ஷன் படங்களுக்கு தெலுங்கில் எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அவை தெலுங்கில் டப் செய்யப்பட்டுநன்றாக ஓடுவதுண்டு. அதே போல ரஜினிக்கும் அங்கு பெரிய மார்க்கெட் உண்டு. இதனால் அவர்களது படங்களின் தெலுங்குரைட்ஸ் பெரிய விலைக்குப் போகும்.

ஆனால், இருவருமே நேரடியாக தெலுங்கில் நுழைந்ததில்லை. இதனால் இதுவரை தமிழ் ஹீரோக்களை பெரிய பிரச்சனையாகஅவர்கள் பார்த்தது இல்லை.

மிக அரிதாக இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் போன்றவர்கள் தான் தமிழில் இருந்து நேரடியாக தெலுங்கில் நுழைந்து முன்னணிஹீரோக்களை ஆட்டியவர்கள். அவரைத் தவிர தமிழில் இருந்து வேறு யாரும் பெரிய அளவில் அங்கு காலூன்றியதில்லை.


அதே நேரத்தில் கன்னடத்தில் இருந்து அர்ஜூன் உள்ளிட்டவர்கள் தெலுங்கில் நேரடியாக நடிப்பதுண்டு. ஆனால், இவர்களுக்குகன்னடத்திலேயே பெரிய மார்க்கெட் கிடையாது என்பதால் அந்த வருகையை தெலுங்கு ஹீரோக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.இவர்கள் பெரிய போட்டியும் தந்ததில்லை, அந்த அளவுக்கு கதையிலும் நடிப்பிலும் சரக்கு இருப்பதில்லை.

ஆனால், விக்ரம் விஷயத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மத்தியில் பெரும் அச்சம் பரவிக் கிடக்கிறதாம்.

நடிப்பிலும் ஆக்ஷனின் ஒரே நேரத்தில் கலக்கி வரும் விக்ரமை தெலுங்குக்குக் கொண்டு போக அங்குள்ள பட அதிபர்கள்போட்டி போட்டு வருகின்றனர். தமிழைவிட பல மடங்கு சம்பளம் தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

விக்ரமின் பிதாமகன் தெலுங்கில் பிரமாதமாக ஓடியது. தில், தூள், சாமி ஆகியவையும் சக்கை போடு போட்டன. அந்நியனோஅபரஜித்துடு என்ற பெயரில் வெளியாகி பல தெலுங்கு ரெக்கார்டுகளை முறியடித்துக் கொண்டு வசூலை அள்ளிக் குவித்துவருகிறது.

இதனால் விக்ரமுக்கு அங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதை விக்ரமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்முடிவில் இருக்கிறார்.

இப்போது ஆசினுடன் நடித்து வரும் மஜா படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்விக்ரம். மஜா படத்துக்கு அயர்லாந்தில் பாடல் காட்சிகளை எடுக்கும் வேலை மட்டுமே பாக்கியாம். அது முடிந்தவுடன் தெலுங்கில்கால் பதிப்பார் விக்ரம் என்கிறர்கள்.


குணசேகர் என்ற இயக்குனரின் படத்தில் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார். இதற்காக கால்ஷீட்டும் தந்துவிட்டார். ஆனால்,இதை அறிந்த தெலுங்கு பட நாயகன் மகேஷ் பாபு, குணசசேகரை அழைத்து தன்னை வைத்து உடனே ஒரு படம் பண்ணச்சொல்லியிருக்கிறார்.

வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டுத் தான் அடுத்த படத்துக்கு வருவது மகேஷ்பாபுவின் ஸ்டைல். ஆனால், இப்போது ஒருபடத்தின் நடித்துக் கொண்டே தன்னை வைத்து அடுத்த படத்தைத் தொடங்குமாறு குணசேகரை நச்சரித்து வருகிறாராம்மகேஷ்பாபு.

விக்ரமின் வருகைக்கு முட்டுக் கட்டை போடவே இந்த வேலையில் மகேஷ்பாபு இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இதன்பின்னணியில் வேறு சில முன்னணி தெலுங்கு நடிகர்களும் இருப்பதாக சொல்கிறார்கள்.

(குணசேகர் தெலுங்கில் எடுத்த ஒக்கடு படம் தான் சமீபத்தில் அங்கு வசூலில் புதிய வரலாறு படைத்த படம் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது தான் தமிழில் கில்லியாக வெளி வந்து வசூலை வாரிக் குவித்தது.)


ஆரம்ப காலத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பல தெலுங்குப் படங்களில் நடித்தவர் தான். ஆனால், இப்போது முன்னணிஹீரோவாகிவிட்ட நிலையில் தெலுங்கில் அவர் கால் பதிப்பது கலர்புல் பேண்ட், அதைவிட கலர்புல்லான சட்டை போட்டுக்கொண்டு, மும்பை ஹீரோயின்களுடன் டான்ஸ் ஆடி, அடிக் குரலில் சத்தம் போட்டு பேசி இதுவரை தெலுங்கு ரசிகர்களை ஏமாற்றிவந்த பல முன்னணி ஹீரோக்களுக்கு பயத்தைத் தந்துள்ளதாம்.

இதற்கிடையே இந்தியில் இருந்தும் விக்ரமுக்கு அழைப்பு வர ஆரம்பித்துவிட்டது. சீயான் காட்டில் மஜாவான மழை..

Read more about: vikram to to go telugu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X