For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மஜாவான விக்ரம்

  By Staff
  |

  தமிழ் டைரக்டர்களை கடந்த பல மாதங்களாக அலையவிட்ட நடிகர் விக்ரம், தனது "மஜாவான அடுத்த படத்திற்குமலையாளத்திலிருந்து ஒரு டைரக்டரை இறக்குமதி செய்துள்ளார்.

  கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த படியாக தினமும் ஏராளமான முன்னணி டைரக்டர்கள் கதை சொல்ல க்யூவில்நிற்பது விக்ரமிடம் மட்டும் தான். விக்ரமின் கால்ஷீட்டுக்காக பல முன்னணி தயாரிப்பாளர்களும் அவரது வீட்டை நோக்கிபடையெடுத்து வருகின்றனர்.

  பிதாமகனுக்காக நீண்ட நாட்கள் யாருக்கும் கால்ஷீட் கொடுக்காமல் இருந்த விக்ரம், ஷங்கரின் அந்நியனுக்காக சுமார் ஒன்றரைவருடம் யாருக்கும் கால்ஷீட் கொடுக்காமல் இருந்தார். இதனால் இவரை வைத்து காசு பண்ண திட்டமிட்டிருந்த பலர்ஏமாற்றமடைந்தனர்.

  சரி, அந்நியன் முடிந்த பிறகாவது விக்ரமை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டு விட்டு கோலிவுட்டின் பல முன்னணிடைரக்டர்கள் அவருக்கு வலை வீசினர். ஆனால் விக்ரமுடன் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

  விக்ரமை பார்க்க முடியாத வருத்தத்தில் பல டைரக்டர்கள் தங்களது கதையை மூட்டை கட்டி பரணில் போட்டு விட்டனர்.எக்குத்தப்பாக எங்காவது விக்ரம் சிக்கி அவரிடம் கதை சொல்லிய டைரக்டர்களும் உண்டு.

  இப்படி சில டைரக்டர்களின் கதையை விக்ரம் ஓகே சொல்லியுள்ளார். இந்த சந்தோஷத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில்இறங்கலாம் என்றால் அதற்குப் பிறகு விக்ரமின் நிழலைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை.

  இப்படி ஏமாந்தவர்களின் பட்டியலில் தங்கர் பச்சான், ரமணா, கரு.பழனியப்பன் ஆகியோரும் உண்டு. தங்கர் பச்சான்,"சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தை முதலில் விக்ரமை வைத்து எடுக்கத் தான்தங்கர் பச்சான் திட்டமிட்டிருந்தார்.

  கடமைகள், குடும்பப் பொறுப்புகளை மறந்து, தான்தோன்றித்தனமாக, எந்தவித கவலைகளும் இல்லாமல் சன்னியாசி என்றபெயரில் வாழும் ஒருவரைப் பற்றிய கதையைத் தான் விக்ரமை வைத்து தங்கர் சொல்லத் திட்டமிட்டிருந்தார்.

  விக்ரமுக்கு இந்தக் கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துத் தான் மற்ற டைரக்டர்களைப் போல தங்கரும்அவருக்காக காத்துக் கிடந்தார். ஆனால் விக்ரமோ இவருக்கும் அல்வா கொடுத்து விட்டார்.

  இதனால் மனம் வெறுத்த தங்கர், தானே கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்து விட்டார். ஆனால், தானேஹீரோ ஆன பின் ஹீரோயின் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. 2 குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க எந்த ஹீரோயினும்ஒப்புக் கொள்ளாததால், கடைசியாத மலையாள மங்கை நவ்யா நாயர் வளைத்துப் போட்டுள்ளார் தங்கர்.

  பல டைரக்டர்களுக்கு அல்வா கொடுத்து, தங்கர் பச்சானை ஹீரோவாகவும் ஆக்கிவிட்ட விக்ரம், அடுத்து "மஜா என்ற படத்தில்நடிக்கிறார். இதை இயக்குவது மலையாளத்தைச் சேர்ந்த ஷாபி. இவருக்கு கோலிவுட் புதுசு.

  வழக்கம் போலவே இந்தப் படத்திலும் விக்ரமுக்கு மிகவும் மாறுபட்ட வேடம் தானாம்.

  சிம்பு நடித்த தம் படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முதன் முறையாக விக்ரமுக்குஜோடிசேர்கிறார் ஆசின். 17ம் தேதி இந்தப் படத்திற்கு பூஜை போடப்படுகிறது. 20ம் தேதி முதல் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, காரைக்குடி பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறுகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

  அந்நியன் கொசுறு: அந்நியன் படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுவதும் 200 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.ஆந்திராவில் 150 தியேட்டர்களிலும், கேரளாவில் 25 தியேட்டர்களிலும், கர்நாடகத்தில் 25 தியேட்டர்களிலும், பலவெளிநாடுகளிலாக 80 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

  இந்த டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லா தியேட்டர்களிலும் "ஒன்ஸ்மோர்கேட்கிறார்களாம்.

  இதோ வந்துவிட்டது, அதோ வந்துவிட்டது என்று அந்நியனுக்கு நாள் குறித்து, கடைசியாக வருகிற 17ம் தேதி எப்படியும்வெளியாகி விடும் என்று கூறுகிறார்கள்.


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X