»   »  விக்ரமுடன் ஜோடி சேரும் கேத்ரீனா தனது சொந்த ஊரான பரமகுடி என்ற பெயரில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் விக்ரம். ஆனால், படத்தின் பெயரை அறந்தாங்கிஎன்று மாற்றச் சொல்லிவிட்டாராம்.மதுர, சிவகாசி என்று ஊர்த் தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் விஜய். இப்போது அஜீத்தும் ஏவிஎம் தயாரிப்பில் திருப்பதி என்படத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களை எல்லாம் இயக்கியது பேரரசு.அடுத்ததாக இவர் விக்ரமை வைத்து இயக்கும் படத்துக்கு பரமகுடி என்று பெயரிட்டிருந்தார். இதைத் தயாரிப்பது சூப்பர் குட்பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ஆனால், பரமகுடி என்றால் கமல் தான் நினைவுக்கு வர வேண்டும். நானும் பரமகுடிக்காரன் தான் என்றாலும் அந்தப் பெயரில் நடிப்பது சரியல்ல. பரமகுடி என்றால் கமல் தான் என்று சொல்லிபடத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிவிட்டாராம் விக்ரம்.இதற்கிடையே விக்ரம் நடிக்க மஜா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைத் தராததால் நஷ்டத்தை ஈடு கட்டுமாறு பிக்கல் பிடுங்கல்செய்ய ஆரம்பித்துவிட்டனராம் வினியோகஸ்தர்கள்.அந்நியன் மெகா வெற்றியைத் தொடர்ந்து மஜா வெளியானதால், படத்தை மிகப் பெரிய விலைக்கு விற்றார் தயாரிப்பாளரானராக்லைன் வெங்கடேஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த இவருக்கு இந்தப் படத்தால் மாபெரும் லாபம். ஆனால், படத்தைவாங்கியவர்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், நிலைமை வேறாம். படத்தால் நஷ்டமே மிஞ்சியதாம். இதையறிந்த விக்ரம், இதனால் தனது அடுத்த படங்களுக்குபிரச்சனை வரும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு பணத்தைத்திருப்பித் தருமாறு கறாராகச் சொல்லிவிட்டாாரம்.இதனால் விக்ரமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும்சரியான பதில் வரவில்லையாம். இதற்கிடையே மஜா லேட் பிக்-அப் ஆகி ஓட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்தியேட்டர்காரர்கள். எனவே தயாரிப்பாளருக்கு பணம் திருப்பித் தரும் வேலை இருக்காது என்கிறார்கள்.எப்படியோ தன்னால் நஷ்டப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்த விக்ரம் பாராட்டுக்குரியவர் தான். இந்தப் படத்துக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் பீமா என்ற படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். மஜாவுக்காக 10 கிலோவெயிட்டைக் குறைத்தவர் இப்போது பீமாவுக்காக எடையைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்.இதைத் தயாரிப்பது ஏ.எம். ரத்னம். படத்துக்காக எடையோடு அழகையும் கூட்ட கோவையில் உள்ள டாக்டர் ரவீந்திரன் என்றகேரள ஆயுர்வேத டாக்டரிடம் புத்துணர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.இந்தப் படத்தில் தெலுங்கை இப்போது கொள்ளை கொண்டு வரும் கேத்ரீனா கைப் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம்என்கிறார்கள்.மாடலிங்கில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து அங்கிருந்து தெலுங்குக்குப் போய் பெரிசுகளுடன் நடித்து கவர்ச்சி விருந்து படைத்துவரும் ராட்சசி தான் கேத்ரீன. விக்ரமுடன் ஜோடி போட தீவிரமாய் இருக்கிறாராம்.

விக்ரமுடன் ஜோடி சேரும் கேத்ரீனா தனது சொந்த ஊரான பரமகுடி என்ற பெயரில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் விக்ரம். ஆனால், படத்தின் பெயரை அறந்தாங்கிஎன்று மாற்றச் சொல்லிவிட்டாராம்.மதுர, சிவகாசி என்று ஊர்த் தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் விஜய். இப்போது அஜீத்தும் ஏவிஎம் தயாரிப்பில் திருப்பதி என்படத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களை எல்லாம் இயக்கியது பேரரசு.அடுத்ததாக இவர் விக்ரமை வைத்து இயக்கும் படத்துக்கு பரமகுடி என்று பெயரிட்டிருந்தார். இதைத் தயாரிப்பது சூப்பர் குட்பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ஆனால், பரமகுடி என்றால் கமல் தான் நினைவுக்கு வர வேண்டும். நானும் பரமகுடிக்காரன் தான் என்றாலும் அந்தப் பெயரில் நடிப்பது சரியல்ல. பரமகுடி என்றால் கமல் தான் என்று சொல்லிபடத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிவிட்டாராம் விக்ரம்.இதற்கிடையே விக்ரம் நடிக்க மஜா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைத் தராததால் நஷ்டத்தை ஈடு கட்டுமாறு பிக்கல் பிடுங்கல்செய்ய ஆரம்பித்துவிட்டனராம் வினியோகஸ்தர்கள்.அந்நியன் மெகா வெற்றியைத் தொடர்ந்து மஜா வெளியானதால், படத்தை மிகப் பெரிய விலைக்கு விற்றார் தயாரிப்பாளரானராக்லைன் வெங்கடேஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த இவருக்கு இந்தப் படத்தால் மாபெரும் லாபம். ஆனால், படத்தைவாங்கியவர்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், நிலைமை வேறாம். படத்தால் நஷ்டமே மிஞ்சியதாம். இதையறிந்த விக்ரம், இதனால் தனது அடுத்த படங்களுக்குபிரச்சனை வரும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு பணத்தைத்திருப்பித் தருமாறு கறாராகச் சொல்லிவிட்டாாரம்.இதனால் விக்ரமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும்சரியான பதில் வரவில்லையாம். இதற்கிடையே மஜா லேட் பிக்-அப் ஆகி ஓட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்தியேட்டர்காரர்கள். எனவே தயாரிப்பாளருக்கு பணம் திருப்பித் தரும் வேலை இருக்காது என்கிறார்கள்.எப்படியோ தன்னால் நஷ்டப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்த விக்ரம் பாராட்டுக்குரியவர் தான். இந்தப் படத்துக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் பீமா என்ற படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். மஜாவுக்காக 10 கிலோவெயிட்டைக் குறைத்தவர் இப்போது பீமாவுக்காக எடையைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்.இதைத் தயாரிப்பது ஏ.எம். ரத்னம். படத்துக்காக எடையோடு அழகையும் கூட்ட கோவையில் உள்ள டாக்டர் ரவீந்திரன் என்றகேரள ஆயுர்வேத டாக்டரிடம் புத்துணர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.இந்தப் படத்தில் தெலுங்கை இப்போது கொள்ளை கொண்டு வரும் கேத்ரீனா கைப் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம்என்கிறார்கள்.மாடலிங்கில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து அங்கிருந்து தெலுங்குக்குப் போய் பெரிசுகளுடன் நடித்து கவர்ச்சி விருந்து படைத்துவரும் ராட்சசி தான் கேத்ரீன. விக்ரமுடன் ஜோடி போட தீவிரமாய் இருக்கிறாராம்.

Subscribe to Oneindia Tamil
தனது சொந்த ஊரான பரமகுடி என்ற பெயரில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் விக்ரம். ஆனால், படத்தின் பெயரை அறந்தாங்கிஎன்று மாற்றச் சொல்லிவிட்டாராம்.

மதுர, சிவகாசி என்று ஊர்த் தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் விஜய். இப்போது அஜீத்தும் ஏவிஎம் தயாரிப்பில் திருப்பதி என்படத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களை எல்லாம் இயக்கியது பேரரசு.

அடுத்ததாக இவர் விக்ரமை வைத்து இயக்கும் படத்துக்கு பரமகுடி என்று பெயரிட்டிருந்தார். இதைத் தயாரிப்பது சூப்பர் குட்பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ஆனால், பரமகுடி என்றால் கமல் தான் நினைவுக்கு வர வேண்டும்.

நானும் பரமகுடிக்காரன் தான் என்றாலும் அந்தப் பெயரில் நடிப்பது சரியல்ல. பரமகுடி என்றால் கமல் தான் என்று சொல்லிபடத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிவிட்டாராம் விக்ரம்.

இதற்கிடையே விக்ரம் நடிக்க மஜா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைத் தராததால் நஷ்டத்தை ஈடு கட்டுமாறு பிக்கல் பிடுங்கல்செய்ய ஆரம்பித்துவிட்டனராம் வினியோகஸ்தர்கள்.

அந்நியன் மெகா வெற்றியைத் தொடர்ந்து மஜா வெளியானதால், படத்தை மிகப் பெரிய விலைக்கு விற்றார் தயாரிப்பாளரானராக்லைன் வெங்கடேஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த இவருக்கு இந்தப் படத்தால் மாபெரும் லாபம். ஆனால், படத்தைவாங்கியவர்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால், நிலைமை வேறாம். படத்தால் நஷ்டமே மிஞ்சியதாம். இதையறிந்த விக்ரம், இதனால் தனது அடுத்த படங்களுக்குபிரச்சனை வரும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு பணத்தைத்திருப்பித் தருமாறு கறாராகச் சொல்லிவிட்டாாரம்.

இதனால் விக்ரமை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இன்னும்சரியான பதில் வரவில்லையாம். இதற்கிடையே மஜா லேட் பிக்-அப் ஆகி ஓட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்தியேட்டர்காரர்கள். எனவே தயாரிப்பாளருக்கு பணம் திருப்பித் தரும் வேலை இருக்காது என்கிறார்கள்.

எப்படியோ தன்னால் நஷ்டப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்த விக்ரம் பாராட்டுக்குரியவர் தான்.

இந்தப் படத்துக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் பீமா என்ற படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். மஜாவுக்காக 10 கிலோவெயிட்டைக் குறைத்தவர் இப்போது பீமாவுக்காக எடையைக் கூட்டிக் கொண்டிருக்கிறார்.

இதைத் தயாரிப்பது ஏ.எம். ரத்னம். படத்துக்காக எடையோடு அழகையும் கூட்ட கோவையில் உள்ள டாக்டர் ரவீந்திரன் என்றகேரள ஆயுர்வேத டாக்டரிடம் புத்துணர்ச்சி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

இந்தப் படத்தில் தெலுங்கை இப்போது கொள்ளை கொண்டு வரும் கேத்ரீனா கைப் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கலாம்என்கிறார்கள்.

மாடலிங்கில் இருந்து பாலிவுட்டுக்கு வந்து அங்கிருந்து தெலுங்குக்குப் போய் பெரிசுகளுடன் நடித்து கவர்ச்சி விருந்து படைத்துவரும் ராட்சசி தான் கேத்ரீன. விக்ரமுடன் ஜோடி போட தீவிரமாய் இருக்கிறாராம்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil