twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமை இழுக்கும் இந்தி!!

    By Staff
    |

    விக்ரமின் இந்தி அந்நியன் அங்கு பெரும் ஹிட் படமாகி உள்ளது. இதனால் இந்தித்திரையுலகில் விக்ரக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் வித்தியாச நடிப்பில் உருவான அந்நியன், தமிழில்சூப்பர் ஹிட் படமானது. இப்போது அந்நியன் இந்தியில் அபராஜித் என்ற பெயரில்டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது.

    அந்நியனின் இந்திப் பதிப்பு வட மாநில திரை ரசிகர்களின் பேராதரவை பெற்றுஅரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

    முதல்வன் படத்தை இந்தியில் தயாரித்து கையை சுட்டுக் கொண்ட ஷங்கருக்குஅபராஜித் பட வெற்றி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.


    கமல்ஹாசனுக்குப் பிறகு இந்தி ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக விக்ரம்உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் உருவாகி இந்தியில் டப் செய்யப்பட்டபடங்களில் ரோஜாவுக்குத்தான் ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்குப்பிறகு இப்போது அபராஜித்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    திரையிடப்பட்ட அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அபராஜித்ஓடிக் கொண்டுள்ளது. இந்தி தொலைக்காட்சிகளில் விக்ரமின் பேட்டிகள் இடம் பெறத்தொடங்கியுள்ளன. இந்தி ரசிகர்களின் விவாதப் பொருளாகியுள்ளார் விக்ரம்.

    விக்ரமுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, கமல்ஹாசனுக்குப் பிறகு ஒருதென்னிந்தியருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு என்று மும்பையைச்சேர்ந்த மூத்த சினிமா பி.ஆர்.ஓவான பீட்டர் மார்டிஸ் கூறியுள்ளார்.


    அபராஜித் படம் இரண்டு முறை பத்திரிக்கையாளர்களுக்கும் போட்டுக்காட்டப்பட்டதாம். எந்த இந்திப் படத்திற்கும் இதுபோல 2 முறை பத்திரிக்கையாளர்திரைப்படக் காட்சி நடைபெற்றதில்லையாம்.

    விக்ரமின் நடிப்பு, கேமரா, ஷங்கரின் இயக்கம், பீட்டர் ஹெய்ன்ஸ் படமெடுத்தசண்டைக் காட்சிகள், இசை என அனைத்தையும் வெகுவாக சிலாகித்து இந்திப்பத்திரிக்கைகளிலும் வட மாநில ஆங்கில பத்திரிக்கைகளிலும் விமர்சனங்களும் வரஆரம்பித்துள்ளன.

    விக்ரம், ஷங்கருக்கு அடுத்தபடியாக பீட்டர் ஹெய்ன்ஸ்சுக்கு மிகப் பெரிய வரவேற்புகிடைத்துள்ளது.

    ஏற்கனவே விக்ரமின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போயுள்ள மும்பை சினிமாஜாம்பவான்கள், அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க ஆர்வம் கொண்டிருந்தனர்.

    இப்போது அபராஜித் மூலம் அவருக்கு ஒரு மார்க்கெட்டும் உருவாகும் என கணக்குபோடும் இந்தி திரையுலக ஆட்கள் விக்ரமை இந்திக்குக் கொண்டு போக முன்பை விடஅதிகமாகவே ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.


    அவர்களில் முக்கியமானவர் கோவிந்த் நிஹ்ாலனி. பிரபல இயக்குனரான நிஹ்ாலனி,தனது படத்தில் விக்ரமை நடிக்க பேரார்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    நிஹ்ாலனி விக்ரம் குறித்து இப்படிக் கூறுகிறார். சஞ்சீவ் குமாருக்குப் பிறகு இந்தித்திரையுலகில் பன்முக திறமை கொண்ட ஒரு நடிகர் உருவானதில்லை. அந்த இடத்தைநிரப்ப வந்திருக்கிறார் விக்ரம் என்கிறார்.

    விக்ரமுக்கு இந்தியில் கிடைத்துள்ள ஆரம்ப வரவேற்பே அட்டகாசமாக இருப்பதால்இப்போது தயாரிப்பில் இருக்கும் பீமா படத்தையும் இந்திக்குக் கொண்டு போகதயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

    இதில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் நானே படேகரிடம் பேசியுள்ளார்கள். ஆனால்,அவர் ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதால் யோசிக்கிறார்களாம்.

    கமலுக்குப் பிறகு வட இந்தியர்களை வசீகரிக்கப் போகும் விக்ரமால் தமிழ்சினிமாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் கூட பெருமைதான்.

      Read more about: bollywood pulls vikram
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X