நாளைக்கு சியான் விக்ரம் பர்த்டே.. காமன் டிபியை வெளியிட்ட கோப்ரா இயக்குநர்.. தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: சினிமாவை விட்டு சியான் விக்ரம் விலகப் போவதாக அண்மையில் வெளியான வதந்திகள் விக்ரம் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது.

Recommended Video

Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

இந்நிலையில், சியான் விக்ரமின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பிறந்தநாள் ஸ்பெஷல் காமன் டிபியை கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.

அஜய் ஞானமுத்து ட்வீட் போட்ட அடுத்த நிமிஷம் டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் #VikramBDayCDP என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

விக்ரம் பிறந்தநாள்

விக்ரம் பிறந்தநாள்

1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்த கென்னடி ஜான் விக்டர், தமிழ் சினிமாவையே பெருமை கொள்ளச் செய்யும் சியான் விக்ரமாக மாறியுள்ளார். நாளை சியான் விக்ரமின் 54வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருந்திருந்தால், இந்நேரம் விக்ரமின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி இருப்பார்கள்.

பர்த்டே காமன் டிபி

சியான் விக்ரமின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், காமன் டிபி ஒன்றை கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். நாளை கோப்ரா படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

எல்லாமே விக்ரம்

கமல்ஹாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல விதமான முயற்சிகளையும் கெட்டப்புகளிலும் நடித்த நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான் என்றே சொல்லலாம். அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள இந்த காமன் டிபியே அதற்கு ஆதாரம் என்று சொல்லும் வகையில், எல்லாமே விக்ரமாக, இத்தனை கெட்டப்புகளிலா? நடித்துள்ளார் என்று பலரையும் வியக்க வைத்து வருகிறது.

கோப்ரா டீசர்

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் ரிலீஸ் கொரோனா கலவரத்தால் தள்ளிப் போய் இருக்கிறது. விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கோப்ரா படத்தின் டீசர் வெளியாகுமா? என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக இருக்கிறது.

டிரெண்டிங்

சேது, பிதாமகன், தில், ஜெமினி, தூள், காசி, சாமி, அந்நியன், ஐ என பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள சியான் விக்ரம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சொத்து. அதிகளவில் ஹேட்டர்கள் இல்லாத நடிகராகவும் விக்ரம் கோலிவுட்டில் வலம் வருகிறார். விக்ரமின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் காமன் டிபி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நாளைக்கு தெறிக்கும்

சினிமாவில் இப்படியொரு உயரத்தை சம்பாதிக்க பல நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்தே விக்ரம் தனது விடாமுயற்சியால் இந்த நிலைமை எட்டியுள்ளார். ஒவ்வொரு படங்களிலும் தனது உயிரைக் கொடுத்து நடித்து வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என பல தரமான சம்பவங்கள் காத்துக் கிடக்கின்றன. நாளை விக்ரமின் பிறந்தநாள் கொண்டாடும் வகையில் சோஷியல் மீடியாவே விக்ரம் ரசிகர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X