அட விக்ரமின் பேத்தி புகைப்படமா இது?.. இணையத்தில் ட்ரெண்டாகும் செம ஃபோட்டோ

சென்னை: விக்ரமின் நடிப்பில் தங்கலான் படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. பா.இரஞ்சித் இயக்கியிருந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் அப்படம் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது. இதனால் சியான் செம ஹேப்பி. அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் விக்ரமின் பேத்தி என்று சொல்லி ஒரு புகைப்படம் பரவிவருகிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

Chiyaan Vikram Thangalaan Veera Dheera Sooran

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்கள், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

தங்கலான்: அவரது நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளியானது. பா.இரஞ்சித் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. முக்கியமாக வழக்கம்போல் விக்ரம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்துக்காக விக்ரம் விருதுகளை வெல்வார் என்று அவரது ரசிகர்கள் உறுதியாக கூறிவருகிறார்கள். மேலும் படம் ஹிட்டானதில் விக்ரமும் செம ஹேப்பியாக இருக்கிறார்.

வீர தீர சூரன்: அடுத்ததாக அவர் சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக விக்ரமுக்கு கம்பேக்காக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார்.

ட்ரெண்டாகும் ஃபோட்டோ: இந்நிலையில் தங்கலான் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் வெள்ளை வேட்டி, சட்டையில் மாஸாக கலந்துகொண்டார் விக்ரம். அப்போது அவர் பா.ரஞ்சித்தின் தோளில் கை போட்டபடி புகைப்படம் எடுத்தார் விக்ரம். அந்தப் புகைப்படத்தில் விக்ரம் கையில் வைத்திருந்த ஃபோனில் ஒரு சிறு குழந்தையின் கைகள் இருந்தன. அதனை பார்த்த ரசிகர்கள், ஓ இது விக்ரமின் பேத்தியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X