விக்ரமின் வீர தீர சூரன்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. எப்போ, எங்கே ஷூட்டிங் தெரியுமா?
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துவருகிறார். இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
விரைவில் ரிலீஸ்: முதலில் அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரலுக்கு பிறகு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வீர தீர சூரன்: அடுத்ததாக அவர் சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக விக்ரமுக்கு கம்பேக்காக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
வெளியான லேட்டஸ்ட் தகவல்: இந்நிலையில் வீர தீர சூரன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது விக்ரம் இப்போது தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவிருக்கிறார். ப்ரோமோஷன் பணிகள் முடிந்த பிறகு வீர தீர சூரன் ஷூட்டிங் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும்; தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்த இயக்குநர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











