கேஜிஎஃப்பை விட மிரட்டுதே.. வெளியானது விக்ராந்த் ரோணா படத்தின் ’டெட்மேன்ஸ் ஆந்தம்’ டீசர்!

பெங்களூரு: நடிகர் கிச்சா சுதீப்பின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ராந்த் ரோணா படத்தின் மினி டீசர் வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து பல படங்கள் அதே போல மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன.

அந்த வரிசையில் நடிகர் கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா 3டியில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

50வது பிறந்தநாள்

50வது பிறந்தநாள்

நான் ஈ படத்தில் வில்லனாக மிரட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப். பாகுபலி, முடிஞ்சா இவனை புடி, பயில்வான் என ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கன்னட பிக் பாஸ்

கன்னட பிக் பாஸ்

இதுவரை 8 சீசன்களை கடந்துள்ள கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல சீசன்களை தொகுத்து வழங்கி உள்ளார் நடிகர் கிச்சா சுதீப். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விக்ராந்த் ரோணா

விக்ராந்த் ரோணா

இயக்குநர் அனுப் பந்தாரி இயக்கத்தில் கிச்சா சுதீப், நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் திரைப்படம் விக்ராந்த் ரோணா. பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

கேஜிஎஃப்பை விட

கேஜிஎஃப்பை விட

கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆபிஸை நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் திரைப்படம் பல மடங்கு உயர்த்தி விட்டது. கேஜிஎஃப் 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா அதை விட மிரட்டும் வகையில் உருவாகி வருவதாக கன்னட சினிமா உலகினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெட்மேன்ஸ் ஆந்தம்

கிச்சா சுதீப்பின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு விக்ராந்த் ரோணா படத்தின் அசத்தலான டெட்மேன்ஸ் ஆந்தம் க்ளிம்ஸ் வெளியாகி இருக்கிறது. கொட்டும் மழையில் அசத்தல் சண்டைக் காட்சியை கிச்சா சுதீப் போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு

விக்ராந்த் ரோணா க்ளிம்ஸ் பார்க்க ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு கிச்சா சுதீப் சார்.. ஹாப்பி பர்த்டே மற்றும் படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X