For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் விக்ராந்த்… பக்ரீத் பட வெற்றியால் குஷியான விக்ராந்த்

  |
  பக்ரீத் படத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு நன்றி.. வீடியோ வெளியிட்ட நடிகர் விக்ராந்த்

  சென்னை: பக்ரீத் படத்தின் வெற்றியின் மூலம் நடிகர் விக்ராந்த், தமிழ் சினிமா உலகையே தன் மீது திரும்ப வைத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றன.

  தொடர்ந்து இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே நடிக்க ஆரம்பித்தார். கடந்த வாரம் விக்ராந்த் நடித்து வெளிவந்த பக்ரீத் படம், நிச்சயம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்று தான் சொல்லவேண்டும்.

  இவருடைய நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவருமே நினைத்தது, இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் இருந்தாலும், ஏன் இன்னும் இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கோபமடைந்தனர். அது தான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

  இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விக்ராந்த்

  இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விக்ராந்த்

  இதற்குத் தானே ஆசைப்பட்டாய் விக்ராந்த் என்று இப்பொழுது அவருடைய மனசாட்சி அவரைப் பார்த்து கேட்கும். ஆம் அந்த உயரத்தை அவர் பக்ரீத் படத்தின் மூலம் எட்டிவிட்டார் என்று தான் தெரிகிறது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம், சினிமாவில் நுழைந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த வெற்றி இவர் கைவசம் ஆனது மிகுந்த வேதனைக்குரியது.

  மசாலா படங்கள்

  மசாலா படங்கள்

  பொதுவாக தமிழ்த் திரையுலகில் புதிதாக கால் வைப்பவர்கள் தங்களை நிலை நிறத்திக்கொள்ள முதலில் ஒரு கமர்ஷியல் கலந்த மசாலா படத்தையோ அல்லது ஒரு முன்னணி கதாநாயகனின் தயவிலேயோ தான் படத்தை தருவதுண்டு. இந்த சம்பிரதாயம் தளபதி விஜய் படத்திலேயே நடந்துள்ளது அனைவருக்கும் நன்கு தெரியும்.

  விஜய்யை அடையாளம் காட்டிய பூவே உனக்காக

  விஜய்யை அடையாளம் காட்டிய பூவே உனக்காக

  விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு, எதிர்பார்த்த வெற்றியை தராததால், அதன் பின்பு அவர் நடித்த அனைத்து படங்களுமே கிளுகிளுப்பான மசாலா படங்களாகவே இருந்தன. வேறுவழியில்லாத காரணத்தினால், கேப்டன் விஜயகாந்த்தின் துணையுடன் செந்தூரப் பாண்டி படத்தில் நடித்தார். அந்தப்படம் வெற்றி பெற்றாலும் கூட, இயக்குநர் விக்ரமின் பூவே உனக்காக படம் தான் விஜய்யின் நடிப்புக்கு கிடைத்த முழுமையான அங்கீகாரமாக கருதப்பட்டது. இப்படத்திற்கு பின்பே விஜய்யும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இன்றைக்கு எட்டாத உயரத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோவாக உள்ளார்.

  என் வழி தனி வழி

  என் வழி தனி வழி

  அதே போல விக்ராந்த்தும், முதலில் கற்க கசடற என்னும் மசாலா பாணி படத்தில் நடித்தார். இதைப் பார்த்த திரையுலகத்தினரும், ரசிகர்களும், என்னடா இது இவரும் விஜய் போலவே மசாலா படங்களிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்திவிடுவாரோ என்று பயந்தனர். அங்குதான் இவர், என்னுடைய பாணியே வேறு என்று நிரூபிக்க ஆரம்பித்தார்.

   சிபாரிசுக்கு போனதில்லை

  சிபாரிசுக்கு போனதில்லை

  நின்று நிதானித்து தான் நடிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். இதில் ஆச்சரியப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் தனக்காக என்றைக்குமே தளபதி விஜய்யிடம் சிபாரிசுக்கு போனதாக தெரியவில்லை. தனக்கான பாதையை தானே தேர்ந்தேடுத்து அதில் பயணம் செய்யத் தொடங்கினார்.

  தீனி போட்ட படங்கள்

  தீனி போட்ட படங்கள்

  கற்க கசடற படத்திற்கு பின்பு சில படங்கள் மட்டுமே மசாலா படங்கள். இதைத் தவிர்த்து விக்ராந்த் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல கதையம்சம் உள்ள படங்களே. அதிலும் இவரின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களே. முத்துக்கு முத்தாக தொடங்கி, பாண்டிய நாடு, தாக்க தாக்க, கவண், தொண்டன் என அனைத்துமே இவரின் நடிப்பை வெளிப்படுத்திய படங்களாகவே அமைந்தன.

  முத்துக்கு முத்தாக

  முத்துக்கு முத்தாக

  குறிப்பாக முத்துக்கு முத்தாக படத்தில் நான்கு சகோதரர்களில் ஒருவராக குடும்ப ஒற்றுமைக்காக காதலை தியாகம் செய்யும் கேரக்டரில் நடித்து நம் மனதில் நிற்கிறார். அதேபோல் பாண்டிய நாடு படமும் இவர் பெயர் சொல்லும் படமாகவே அமைந்தது.

  பக்ரீத் ஒரு மைல்கல்

  பக்ரீத் ஒரு மைல்கல்

  தொடர்ந்து இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே நடிக்க ஆரம்பித்தார். கடந்த வாரம் விக்ராந்த் நடித்து வெளிவந்த பக்ரீத் படம், நிச்சயம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்று தான் சொல்லவேண்டும். இவருடைய நடிப்பைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவருமே நினைத்தது, இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் இருந்தாலும், ஏன் இன்னும் இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கோபமடைந்தனர். அது தான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

  பக்ரீத் சரியான தீனி

  பக்ரீத் சரியான தீனி

  தற்போது வெளிவந்த பக்ரீத் படம் தான் அவருக்கு சரியான தீனியாக அமைந்தது என்றும், இவரை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது என்றும் தெரிவித்தனர். இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து ஒரு கிராமத்து விவசாயியாகவே மாறியிருந்தார். அதிலும் ஒட்டகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியும் நம் மனதை நெகிழச்செய்யும்.

  மறக்க முடியாத படம்

  மொத்தத்தில் பக்ரீத் படம் நிச்சயமாக விக்ராந்த்துக்கு மறக்க முடியாத படமாகவே இருக்கும். இனிமேலாவது தரமான படங்களை இயக்கும் இயக்குநர்களின் பார்வை இவர் மீது பட்டால் தமிழ் சினிமாவுக்கு தான் நல்லது. இப்பொழுது இவரை விட தளபதி விஜய்யும் அவரின் ரசிகர்களும் தான் விக்ராந்த்தை கொண்டாடுகிறார்கள்.

  14 ஆண்டுகள்

  சினிமாவில் நுழைந்து 14 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த பிரமாண்ட வெற்றியால் அவரும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். அவர் இனிமேலும் இதுமாதிரி தரமான படங்களை கொடுக்கவேண்டும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  English summary
  Kollywood sources are happy that actor Vikrant has turned the world of Tamil cinema on him with the success of the film Bakrid
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X