நிக்க கூட முடியல.. எப்படி இருந்த மனுஷன்.. வீல் சேரில் பொன்னம்பலம்.. பாக்கவே கஷ்டமா இருக்கு!
சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி பொன்னம்பலத்திற்கு சரத்குமார் நடித்த நாட்டாமை படம் திருப்புமுனையான அமைந்தது. அந்த அட்டகாசமான வில்லத்தத்தை வெளிப்படுத்திய பொன்னம்பலம், தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் நடித்துள்ளார். சிறுநீரகக் கோளால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அற்போது, அவர் வீல் சேரில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பல திரைப்படங்களில் நடித்து வந்த பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத நிலையில் தனக்கு உதவ வேண்டும் என வீடியோவில் பேசினார். அதன் பின், சரத்குமார் அவருக்கு முதல் நபராக உதவி செய்து பலரிடம் சிபாரிசு செய்தார். அதன் பிறகு தான் கே.எஸ் ரவிக்குமார், தனுஷ், அர்ஜூன், சிரஞ்சீவி என பலரும் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தார்கள்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம் : தன் உடல் நிலை குறித்து ஒரு ஊடகத்திற்க பேட்டி அளித்து இருந்த பொன்னம்பலம், என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், உடம்பில் இரண்டு ஊசி போட்டு உடம்பில் இருக்கும் ரத்தத்தை எடுத்துவிட்டு, டயாலிசிஸ் செய்வார்கள். இதற்காக கிட்டத்தட்ட 750 முறை நான் ஊசி போட்டு இருக்கிறேன். இதை நான், நான்கு வருடமாக செய்தேன், உண்மையில் கொடுமையான விஷயம் என கண்ணீருடன் பேசி இருந்தார்.
எப்படி இருந்த மனுஷன்: அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும், அவரின் உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை, தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததால், அவர் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரால் வீல் சேர் இல்லாமல் நடக்கவே முடியவில்லை. எங்கு சென்றாலும் அவர் வீல் சேரில் தான் செல்கிறார். அண்மையில் பொன்னம்பலம் வீல் சேரில் இருந்தபடியே நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த பலர், நாட்டாமை படத்தில் சும்மா கல்லுமாதிரி மனுஷன் இருந்தாரே, அப்படிப்பட்ட மனுஷனுக்கா இந்த நிலைமை என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











