விமல் குழந்தைகளுக்கு காதணி விழா.. மயிலாட்டம், கிடா கறி விருந்து.. எல்லோரையும் வாய் பிளக்க வெச்சுட்டாரு
திண்டுக்கல்: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர் விமல். அவரது நடிப்பில் கடைசியில் மகாசேனா உள்ளிட்ட படங்கள் வந்தன. ஆனால் அவை எதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. விலங்கு செப் சீரிஸ்தான் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விலங்கு 2 மற்றும் சில திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறாராம். இந்நிலையில் அவர் தன் குழந்தைகளுக்கு காதணி விழாவை நேற்று திண்டுக்கல்லில் வைத்திருந்தார்.
கூத்து பட்டறை மாணவரான விமல்; சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் தலை காட்டினார். விஜய் நடித்த கில்லி, அஜித் நடித்த கிரீடம் உள்ளிட்ட படங்களில் எல்லாம் சில நிமிடங்கள் வந்து சென்றார். அப்படிப்பட்ட சூழலில்தான் சற்குணம் இயக்கத்தில் வெளியான களவாணி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து நடித்த பசங்க படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் அப்படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

செம ஃபார்மில் விமல்: முதல் இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி நடித்த வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களும் வெற்றியடைந்தன. இதனால் அவர் பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த படங்கள் அடுத்தடுத்து சொதப்பிவிட; நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் சரசரவென்று கீழே இறங்கிவிட்டது. அவரும் எத்தனையோ படங்களில் நடித்து பார்த்துவிட்டார். ம்ஹூம் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
நீண்ட காலம் கழித்து ஹிட்: விமல் ஹிட் கொடுத்து ஒரு தசாப்தமே நிறைவடையும் சூழலில் விலங்கு வெப் சீரிஸில் நடித்தார். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றது. விமலின் எதார்த்தமான நடிப்பு, இயக்குநரின் கச்சிதமான கதைக்கள் மற்றும் மேக்கிங் உள்ளிட்டவைகள் எல்லாம் ஹிட்டாக காரணமாக அமைந்தன. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு ஹிட் கிடைத்த உற்சாகத்தோடு அடுத்தடுத்து மகாசேனா, வடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். எதுவும் ஹிட்டாகவில்லை. அநேகமாக விலங்கு 2 வந்துதான் அவருக்கு இன்னொரு ஹிட்டை கொடுக்குமோ என தெரிகிறது.
வீட்டில் விசேஷம்: இதற்கிடையே விமல் தன்னுடைய திரைத்துறை கரியரின் ஆரம்பத்திலேயே திருமணத்தை செய்துகொண்டார். அவர் மருத்துவர் அக்ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைக்காததால் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்தத் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் தம்பதிக்கு ஆகர் என்ற மகனும், ஆத்விகா என்ற மகளும் இருக்கிறார்கள். குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கும் அவரது வீட்டில் விசேஷம் நடந்திருக்கிறது.
என்ன விசேஷம்?: அதாவது திண்டுக்கல்லில் வைத்து பிரமாண்டமான முறையில் தன்னுடய மகனுக்கும், மகளுக்கும் காதணி விழாவை நடத்தியிருக்கிறார். மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்திருக்கும் ஒரு மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் எல்லாம் இந்த விழாவில் பயன்படுத்தப்பட்டன.
தாரை தப்பட்ட முழங்க தாய் மாமன் சீர் பிரமாண்டமாக கொண்டு வரப்பட்டது. விமல் தரப்பிலிருந்தும் தாய் மாமன்களுக்கு சூப்பரான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழாவுக்கு வந்திருப்பவர்களுக்கு பல கிலோ ஆட்டு கறி விருந்தும் மணக்க மணக்க பரிமாறப்பட்டது. திரைத்துறையை பொறுத்தவரை சூரி, சிம்பு தேவன், சிங்கம்புலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.


Click it and Unblock the Notifications
