twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை’! - இது நடிகர் விமலின் கதை!

    By Shankar
    |

    முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கே கடந்த சில வருடங்களாக கையில் ஒன்றிரண்டு படங்கள்தான் இருந்தன. ஆனால், விமலுக்கோ கைவசம் பத்துப் பதினைந்து படங்கள் இருந்தன.

    காரணம், விமலின் சம்பளம் குறைவு; குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்துவிடலாம்; மிகப்பெரிய லாபம் இல்லையென்றாலும், முதலுக்கு மோசம் இல்லாத மினிமம் கியாரண்டி படங்களாகத் தந்து கொண்டிருந்தார் விமல். இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள், வரிசையாக இரண்டு வருடத்துக்கு விமலை புக் செய்தனர்.

    Vimal rejects village stories

    ஆனால், இப்போது நிலமை தலைகீழ். ‘காவல்', ‘அஞ்சல', ‘மாப்ள சிங்கம்' என தொடர் தோல்விகளால் அதல பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது விமலின் மார்க்கெட்.

    இதனால், 70 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விமல், ஒரு கோடியைத் தொடுவதற்குப் பதிலாக 20 லட்சத்துக்கு இறங்கி வந்திருக்கிறார்.

    ‘மனுஷன் நல்ல முடிவு எடுத்திருக்கான்யா... அவனை வச்சு ட்ரை பண்ணலாம்' என்று விமலை சந்திக்கச் சென்ற தயாரிப்பாளர்களுக்காகவே அழகான ட்விஸ்ட் ஒன்றை வைத்திருந்தார் விமல்.

    Vimal rejects village stories

    ‘சம்பளம் 20 லட்சம் கொடுங்க போதும். ஆனா, இனிமே கிராமத்துக் கதையில நடிக்க மாட்டேன். நல்ல சிட்டி சப்ஜெக்ட்டா கொண்டு வாங்க' என்று சொல்ல, 'தம்பிய அடையாளம் காட்னதே அந்த வில்லேஜ் சப்ஜெக்ட்கள்.. அதை மறந்துட்டாரே' என்றபடி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திரும்பி வந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    ஒருவேளை ‘பில்லா-3'ல நடிக்கலாம்னு முடிவு பண்ணிருக்காரோ..?

    English summary
    Actor Vimal nowadays denying to act in village stories and urged producers to come with city subjects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X