விமானத்தில் வினய் மற்றும் விமலா ராமனை பிரிச்சிட்டாங்களே.. புலம்பும் ஜோடி.. என்ன ஆச்சு?

சென்னை: ஒரு பக்கம் இண்டிகோ விமான பிரச்சனை காரணமாக பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் டிராவல் செய்ய போட்டு வைத்திருந்த திட்டங்களுக்கும் வேட்டு வைக்கப்பட்ட நிலையில், அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விமானத்தில் தன்னையும் தனது ஜோடியையும் பிரித்து விட்டதாக வினய் போட்டுள்ள பதிவு நெட்டிசன்களை காண்டாக்கியுள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக நடித்து அசத்திய வினய் சமீப காலமாக முரட்டுத்தனமான வில்லனாக படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கியிருந்தார்.

Vinay and Vimala Raman shares a fun seperation drama in a flight
Photo Credit:

நடிகை விமலா ராமன் உடன் பல ஆண்டுகளாக லிவின் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வரும் வினய் விமானத்தில் அவருடன் பயணித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

துபாய் டூர்: விமலா ராமன் மற்றும் வினய் இருவரும் பார்ட்னர்களாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஜோடியாக இருக்கும் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இருவரும் கணவன் மனைவி என அறிவிக்கவில்லை என்றாலும் லிவ்வின் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், துபாய்க்கு இந்த டிசம்பர் மாதம் இருவரும் ஜாலி டூர் அடித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

விமானத்தில் பிரித்து விட்டனர்: வினய் மற்றும் விமலா ராமன் இருவரும் துபாய் டூர் முடித்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிய நிலையில், அவர்கள் வந்த விமானத்தில் இருவரது இருக்கைக்கும் இடையே ஒரு ஷட்டர் வைத்திருப்பதை பார்த்து எங்களை பிரித்து விட்டனர் என்றும் அதன் பின்னர் நாங்க டிராமாவை ஆரம்பித்துவிட்டோம் என ஷட்டரை திறந்து மூடி விளையாடும் வீடியோவை வெளியிட்டு இண்டிகோ பயணிகளை வெறுப்பேற்றி விட்டார் வினய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X