இனி நடிச்சா ஹீரோ தான், வில்லன் இல்லை: கடுப்பில் அமெரிக்கா பறந்த நடிகர்
சென்னை: இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று வினய் தெரிவித்துள்ளாராம்.
உன்னாலே உன்னாலே படம் மூலம் ஹீரோவானவர் வினய். மோதி விளையாடு, மிரட்டல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரால் எதிர்பார்த்த அளவுக்கு வளர முடியவில்லை.
கோலிவுட்டுக்கு ஹீரோவாக வந்தவர் தற்போது வில்லனாக நடிக்கிறார்.

வில்லன்
விஷாலின் துப்பறிவாளன் படத்தில் வினய் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து வெங்கடேஷ் இயக்கத்தில் தமன் ஹீரோவாக நடித்திருக்கும் நேத்ரா படத்திலும் வினய் வில்லனாக நடித்துள்ளார்.

வினய்
துப்பறிவாளன் படத்தில் வினய் வில்லனாக அம்சமாக இருந்தார். அதன் பிறகு அவரை தேடி வில்லன் கதாபாத்திரங்களாக வருகின்றது. இதை பார்த்த வினய் இப்படியே போனால் நம்மை நிரந்தர வில்லனாக்கிவிடுவார்கள் என்று பயந்து ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அமெரிக்கா
நான் இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். வில்லனாக நடிக்க மாட்டேன் என்று வினய் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ள அவர் அங்கேயே வேலை செய்யப் போகிறாராம். நேத்ரா பட இசை வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவரின் மேனேஜர் கூறி தான் இயக்குனருக்கே விபரம் தெரிய வந்ததாம்.

சினிமா
அமெரிக்காவில் வேலை பார்த்தாலும் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடிப்பாராம். ஹீரோவாக நடிக்க அழைப்போரிடம் மட்டும் கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











