நீங்கள்லாம் ஒரு முஸ்லீமா, வெட்கமாக இல்ல?: ஷாருக்கானை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

மும்பை: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விளாசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது பங்களாவான மன்னத்தில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார். தனது இளைய மகன் ஆப்ராம் விநாயகரை வணங்கிய போது எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை விளாசியுள்ளனர்.

ஆப்ராம்

நம் கணபதி பப்பா வீட்டிற்கு வந்துவிட்டார் என்று என் இளைய மகன் கூறினான் என்று தெரிவித்து ஆப்ராம் விநாயகரை வணங்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷாருக்கான்.

முஸ்லீம்

ஷாருக்கான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? வெட்கமாக இல்லையா என்று அவரை வறுத்தெடுத்துள்ளனர்.

அல்லாஹ்

நீங்கள் எல்லாம் என்ன மாதிரி முஸ்லீம்? இப்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறீர்களே என்று ஷாருக்கானை விளாசியுள்ளனர். அதே சமயம் மதபேதம் பார்க்காமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக்கானை சிலர் வாழ்த்தியும் உள்ளனர்.

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

பாலிவுட் பிரபலங்கள் மத பேதம் பார்க்காமல் பண்டிகைகளை கொண்டாடும் பழக்கம் உள்ளவர்கள். ஷாருக்கானின் மனைவி கௌரி இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் ஷாருக்கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X