ViRosh Wedding: ராஷ்மிகாவை மணக்கும் விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு.. பிரைவேட் ஜெட் எல்லாம் இருக்கா?

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சென்சேஷனல் ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா வரும் பிப்ரவரி 26-ம் தேதி திருமணம் செய்யவுள்ளனர். நீண்ட ஆண்டுகளாக இவர்களின் காதல் குறித்து தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்யவுள்ளது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக நட்சத்திர திருமணங்கள் என்றாலே ஆடல், பாடல் என சங்கீத் நிகழ்ச்சிதான் ஹைலைட்டாக இருக்கும். ஆனால், இந்த ஜோடி இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை அரங்கேற்றியுள்ளது. அதுதான் ViRosh Premier League. உதய்பூர் ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் நீச்சல் குளத்தில் வாலிபால் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய் ஒரு அணிக்கும் ராஷ்மிகா ஒரு அணிக்கும் கேப்டனாக இருந்து மோதுகிறார்கள். வந்திருக்கும் விருந்தினர்களுக்கு ஜப்பானிய கூல் டிரிங்க்ஸ்கள் பரிமாறப்பட்டு, ஒரு ஸ்போர்ட்ஸ் திருவிழாவாகவே திருமணத்தை மாற்றிவிட்டனர்.

அர்ஜுன் ரெட்டி மூலம் இந்தியாவையே அதிர வைத்த விஜய் தேவரகொண்டா, இன்று தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். நேஷ்னல் கிரஷ், பான் இந்தியா ஸ்டார் ராஷ்மிகா மந்தனாவை இவர் திருமணம் செய்யவுள்ளதால் இவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. சுமார் ரூபாய் 70 கோடி சொத்து மதிப்பு கொண்ட விஜய் தேவரகொண்டாவுக்கு, ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா உள்ளது.

ViRosh Wedding Vijay Deverakonda Net Worth How wealthy is Rashmika s groom Vijay Deverakonda
Photo Credit:

கார் கலெக்‌ஷன்ஸ்: விஜய் தேவரகொண்டாவுக்கு கார்கள் மீது தனி ஈர்ப்பு உள்ளதால், அவரது கார்கள் நிறுத்தி இருக்கும் கேரேஜ் ஒரு ஷோரூம் போலவே இருக்கும். சுமார் ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங், ரூபாய் 1.3 கோடி மதிப்பிலான வோல்வோ XC90, மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ், BMW 5 சீரிஸ் என பல சொகுசு கார்களை வைத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இவரிடம் சொந்தமாக ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிராண்ட்: திரைப்படங்கள் தாண்டி 'Rowdy Wear' என்ற ஃபேஷன் பிராண்ட் மற்றும் வாலிபால் அணியின் உரிமையாளர் என பிசினஸிலும் கலக்கி வருகிறார் விஜய் தேவரகொண்டா. இப்போது ராஷ்மிகாவுடன் இணைந்து தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளதால் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் 'விருஷ்' (ViRosh) திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X