விஷால் பெயரில் பண மோசடி
நடிகர் விஷாலின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் பண மோசடியில்ஈடுபட்டு வருவதாகவும், அதை தடுத்து நிறுத்தக் கோரியும் விஷால் சார்பில்போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் மேலாளர் அஜீத் குமார் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், விஷால் பெயரைச் சொல்லிதண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் பண மோசடி செய்துவருகிறார்.விஷாலின் மேனேஜர் என்று கூறிக் கொண்டு அவர் பலரிடம் பண மோசடிசெய்துள்ளதாக அறிகிறோம். விஷாலை விழாக்களுக்கு அழைத்து வருவதாக கூறிஅவர் பண வசூலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விஷாலுக்கு தேவையில்லாத அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. அவர் மீதுசட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications