தமிழுக்கு வரும் பொம்மரிலு
தெலுங்கில் சக்கை போடு போட்ட பொம்மரிலு தமிழ் பேச வருகிறது. தமிழ் ரீமேக்கில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.
பாய்ஸ் நாயகன் சித்தார்த் தெலுங்கில் இப்போது சூப்பர் ஹீரோ. அவரது ஹீரோ இமேஜைத் தூக்கி நிறுத்திய படம்தான் பொம்மரிலு.பாய்ஸ் ஹீரோயின் ஹரிணியோடு சித்தார்த் நடித்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பொம்மரிலு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க நம்ம ஊர் சினிமாப் புள்ளிகள் கடும் போட்டி போட்டனர்.
ரீமேக் நாயகர்களான விஜய், ஜெயம் ரவி ஆகியோர்தான் இதில் கடுமையாக போட்டியிட்டவர்கள். ஆனால் பொம்மரிலு தயாரிப்பாளர் தில் ராஜுவே தமிழிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.
விஷால்தான் படத்தில் ஹீரோ. முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறி விட்ட விஷால் இப்படத்தில் மென்மையான காதல் நாயகனாக நடிக்கப் போகிறார். தற்போது நடித்து வரும் சத்யம் படத்தை முடித்து விட்டு பொம்மரிலு ரீமேக்குக்கு வருகிறாராம் விஷால்.
படத்தின் இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அனேகமாக ரீமா சென், ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்களாம்.
சித்தார்த்துக்கு பெரிய பிரேக் கொடுத்தது போல தமிழ் ரீமேக் பொம்மரிலு தனக்கும் பக்காவான பாதையைக் காட்டும் என விஷால் திடமாக நம்புகிறாராம்.


Click it and Unblock the Notifications











