விஷால்-திரிஷா-மலைக்கோட்டை
விஷால், திரிஷாவின் பின்னல் நடிப்பில் உருவாவதாக இருந்த சத்யம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதில் விஷால் நடிக்கவுள்ள மலைக்கோட்டை ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளதாம்.
முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் விஷால் நடிக்க உருவாகவிருந்த படம் சத்யம். இதில் முதல் முறையாக அவருடன் திரிஷா ஜோடி போடுவதாக இருந்தது. இப்படத்துக்காக தனது தலைமுடியை டிரிம் செய்து போலீஸ்காரராக மனதளவிலும், உடலளவிலும் மாற ஆரம்பித்திருந்தார் விஷால்.ஆனால் சில காரணங்களுக்காக இப்படத்தை 2 மாதங்களுக்கு ஒத்தி வைத்து விட்டனராம். வில்லன் ரோலுக்கு ஆள் கிடைக்காததால்தான் படப்பிடிப்பு ஒத்திபோயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரேக்கை வீணடிக்க விரும்பாத விஷால், புதிதாக ஒப்பந்தமான மலைக்கோட்டை படத்தை தொடங்க முடிவு செய்துள்ளாராம். தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன்தான் மலைக்கோட்டையை இயக்கவுள்ளார்.
மலைக்கோட்டை காமெடி பிளஸ் ஆக்ஷன் கலந்த கதையாம். இப்படத்திலும் விஷாலுக்கு ஜோடி திரிஷாதான் (ஏய், சொல்லவே இல்லை!) இப்படத்தை ஸ்ரீலட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் அஜய் தயாரிக்கிறார். மணி சர்மா இசையமைக்கிறார். மே 1ம் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறதாம்.
கோட்டையை நல்லா இறுக்கமா கட்டுங்க!


Click it and Unblock the Notifications











