»   »  ஹாட்ரிக் நாயகன் விஷால்!

ஹாட்ரிக் நாயகன் விஷால்!

Subscribe to Oneindia Tamil

விஷால் தொடர்ந்து 3 படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்துள்ளதால்கோலிவுட்டின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.

விஷால் நடிகராக அறிமுகமாகி 3 ஆண்டுகள்தான் ஆகியிருக்கலாம். ஆனால் ரொம்பகாலத்திற்குமுன்பே சினிமாவுக்கு வந்து விட்டார். சென்னை லயோலா கல்லூரியில்விஷூவல் கம்யூனிகேஷன் முடித்த பின்னர் உதவி இயக்குனராக அவதாரம் எடுத்தார்விஷால்.

முதலில் ராம்கோபால் வர்மாவிடம் சில படங்களில் ஒர்க் செய்தார். பின்னர் நடிகர்அர்ஜூன் நடித்த ஏழுமலை, வேதம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகபணியாற்றியுள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் மகன் என்றாலும் சினிமாவைமுறைப்படி கற்றுக் கொள்ள மெனக்கெட்டார் விஷால்.

இப்படி உதவி இயக்குனராக ஓடிக் கொண்டிருந்த விஷால், இயக்குனர் காந்திகிருஷ்ணாவின் கண்ணில் படப் போய் செல்லமே படத்தின் நாயகனானார்.

முதல் படமான செல்லமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் விஷால் கவனிக்கப்படஆரம்பித்தார். தொடர்ந்து நடித்த சண்டைக் கோழி (இதை விஷாலின் அப்பாகிருஷ்ணா ரெட்டி தான் தயாரித்தார்) மாபெரும் ஹிட் படமான தால் விஷாலுக்குமார்க்கெட் உயர்ந்தது.

இப்போது வெளியாகியுள்ள திமிரு (இதுவும் அப்பாவின் தயாரிப்புதான்) விஷாலுக்குஸ்டார் வேல்யூ கொடுத்துள்ளது. சமீபத்திய வெளியீடுகளில் திமிரு தான் வசூலில்எகிறிக் கொண்டிள்ளதாம். விஜய் போல ஆக்ஷன் ஹீரோவாக விஷால்உருவெடுத்துள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

அடுத்த விஜய் விஷால் தான் என்றும் பேச்சு கிளம்பி விட்டது. விஜய்யும், விஷாலும்சேர்ந்து விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர்கள், நல்ல தோஸ்துகள் என்பது தெரியும்தானே!

அடுத்தடுத்து 3 ஹிட் படங்களைக் கொடுத்துள்ள தால் விஷாலின் சம்பளம் 1கோடியைத் தொட்டு விட்டதாம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு வேகமாகவளர்ந்து விட்டீர்களே என்று 6 அடி உயர விஷாலை கேட்டபோது வெட்கத்தில் முகம்மேலும் கருத்தது!

இப்போது பொறுப்பு உணர்வு அதிகமாகியுள்ளது. இன்னும் நன்றாக செய்யவேண்டும். என்னை நல்ல நடிகன் தான் என்பதை தமிழக மக்கள் உறுதிப்படுத்தவேண்டும் என ஆசைப்படகிறேன். அதற்கு சிவப்பதிகாரம் என்ற எனது அடுத்த படம்உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

கரு. பழனியப்பன் இயக்கம் என்பதால் சிவப்பதிகாரம் சிறப்பாக வரும் எனநம்புகிறேன். அதேபோல ஹரி சார் இயககும் தாமிரபரணியும் பட்டையைக் கிளப்பும்.

விஷாலின் குடும்பமே சினிமாக் குடும்பம் தான். அவரது அப்பா தயாரிப்பாளர்என்றால் அண்ணன் அஜய் கிருஷ்ணா சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஆனால் அவர் எடுபடாமல் போகவே சினிமாவிலிருந்து விலகி விட்டார்.

அண்ணன் நடித்து பிடிக்க முடியாததைப் பிடிக்க நீங்கள் வந்து விட்டீர்களா என்றுகேட்டால், நிச்சமயாக இல்லை. என்னைக் கவர்ந்தவர் நாகார்ஜூனா தான். அப்போதுநான் பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தேன். நாகார்ஜூனா நடித்த சிவா படத்தைப்பார்த்து இன்ஸ்பிரேஷன் ஏற்பட்டது.

இதன் மூலம் தான் நான் நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததுஎன்கிறார் விஷால்.

விஷாலைப் போலவே திமிரு இயக்குநர் தருண்கோபியும் லைம் லைட்டுக்குவந்துள்ளார். தேனிக்காரரான தருண்கோபியை பல தயாரிப்பாளர்கள் மொய்க்கஆரம்பித்துள்ளனராம். ஆனால் இரண்டு படம் மட்டுமே அடுத்து பண்ணவுள்ளாராம்கோபி.

முதல் படத்தில மாதவன் நடிக்கிறார். இதுவும் ஆக்ஷன் கதைதானாம். தருண்கோபி,மனோஜ்குமார், ஷக்தி சிதம்பரம், வெங்கடேஷ், செந்தில்நாதன், கன்னட நடிகர் பிளஸ்இயக்குனர் உபேந்திரா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.

திமிரு கதையை 3 வருடங்களுக்கு முன்பே உருவாகி விட்ட கோபி, தெக்கத்திசாயலில் ஹீரோ வேண்டும் என்பதற்காக காத்திருந்த விஷாலை வைத்துஉருவாக்கியுள்ளாராம். அதேபோல ஈஸ்வரி பாத்திரத்திற்கும் தில்லான ஆள் வேண்டும்என்பதற்காக ஷ்ரேயா ரெட்டியை நடிக்க வைத்தாராம்.

இப்படி விஷால், தருண்கோபி, ஷ்ரேயா ஆகியோரை திமிரு எகிற வைத்துக்கொண்டுள்ள நிலையில் கோலிவுட்டில் சூடான ஒரு டாக் உலவுகிறது. அதாவதுவிஷால் நடித்த காட்சிகளை அவரே தான் இயக்கினார் என்றும், அவர் சம்பந்தப்படாதபிற காட்சிகளை மட்டுமே தருண் கோபி இயக்கினார் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இதை தருண் கோபி மறுத்துள்ளார். படத்தை இயக்கிய எனக்கு சிலகாட்சிகளை மட்டும் விஷாலை விட்டு இயக்க வேண்டிய அவசியம் என்ன என்றுபாய்கிறார் தருண். இதனால் தருண்-விஷால் இடையே லேசான மோதல் நடந்துவருகிறது.

திருஷ்டி கழிஞ்சதுன்னு நெனச்சி விடுங்கப்பா..

Read more about: vishals remuneration goes up

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil