சண்டக்கோழி 2 ரிலீஸ்: பெரிய திட்டம்போடும் விஷால் விரும்பிகள், ஈசிஆர்ல கொண்டாட்டமாம்!
விஷால் 25ஐ கொண்டாட விஷால் நண்பர்கள் முடிவு
சென்னை: விஷாலின் 25 வது திரைப்படத்தை கொண்டாட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டியின் மகனான விஷால், நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். செல்லமே திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.

லிங்குசாமியின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ரிலீஸான சண்டக்கோழி திரைப்படம் விஷாலின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தற்போது பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சண்டக்கோழி 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது விஷால் நடிப்பில் ரிலீஸ் ஆகும் 25 வது படமாகும். விஷாலின் 25வது திரைப்படத்தை கொண்டாட அவரின் நெருங்கிய நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 24ஆம் தேதி எல்லோரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி விஷால் 25ஐ சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷ்ணு விஷால், சந்தானம், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஷால் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ஹரிஷ் பெரேடி மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











