பாட்டிலால் தலையில் ஒரே அடி... சரமாரியாக அடிவாங்கும் விஷால்!
சென்னை : விஷால்31 திரைப்படத்தில், தத்ரூபமான, ஆக்ஷன் காட்சி வீடியோவை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஷாலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தத்ரூபமான இந்த ஆக்ஷன் காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

புது இயக்குனர்
நடிகர் விஷால் கடைசியாக சக்ரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியானது. புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா, ரோபோ ஷங்கர், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

டீசர் விரைவில்
அடுத்ததாக, விஷால்30 திரைப்படமான 'எனிமி'யில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யாவையும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டீஸர் ஜூன் 20 அன்று வெளியிடப்படும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.

வாய்பிளந்த ரசிகர்கள்
விஷாலின் 31வது திரைப்படத்தை து.பா.சரவணன் இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புதளத்தில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

செம ஆக்ஷன்
அந்த சண்டை காட்சியில் பாட்டிலைக் கொண்டு விஷாலின் தலையில் அடிக்கும் காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் விஷாலின் முகத்தில் ஒரு சில கண்ணாடித்துண்டுகள் பட்டுவிட காட்சி முடிந்ததும் முகத்தை தண்ணீரால் கழுவி முகத்தை துடைத்துக்கொள்கிறார். இந்த ஆக்ஷன் வீடியோவை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Experience the action from the sets of #Vishal31
— Vishal (VishalKOfficial) June 16, 2021
Link - https://t.co/fsKyraVxxZ#NotACommonMan
குவியும் பாராட்டு
ஒரு திரைப்படத்தில் ஒரு சண்டைக்காட்சி வருகிறது என்றால் அதை இயல்பாக பார்த்துவிட்டு கடந்து விடுவோம். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் அடேங்கப்பா இதுல இவ்வளவு காஷ்டம் இருக்கானு யோசிக்க வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் விஷாலை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











