Vishal: அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிடும் ரத்னம் டீம்.. தெறிக்கவிடும் விஷால் 2வது லுக் போஸ்டர்!
சென்னை: நடிகர் விஷாலின் விஷால் 34 படத்தின் டைட்டில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரியுடன் இநத்ப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக இணைகிறார் விஷால். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் இந்தக் கூட்டணி இணைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது ரத்னம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடிகர் விஷால்: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்திருந்த மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை சேர்ந்தவர்களாக இருவேறு கெட்டப்புகளில் நடித்திருந்தனர். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது.
விஷால் -ஹரி கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய விஷால் 34 படத்திற்காக இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் விஷால். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக நடந்துவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தாமிரபரணி மற்றும் பூஜை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் விஷால் மற்றும் ஹரி இணைந்துள்ளனர்.
ரத்னம் படம்: இந்நிலையில் இந்தப் படத்திற்கு ரத்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த டைட்டிலை டீசர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் விஷாலுக்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். முன்னதாக ஹரியின் யானை படத்தில் அருண் விஜய்க்கும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரத்னம் படத்தில் கவுதம் வாசுதேவ மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.
தெறிக்கும் டீசர்: தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதில் ரத்தம் தெறிக்கும்வகையில் காணப்படுகிறார் விஷால். ஒருகையில் அரிவாளும் மறுகையில் வெட்டப்பட்ட தலையுமாக அவர் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டீசரிலும் இந்த காட்சிகள் மிரட்டியது.
ரத்னம் படத்தின் 2வது லுக் போஸ்டர்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக காணப்படுகிறார் விஷால். கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஹரி. மேலும் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் இந்தப் போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஷால் -ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி சிறப்பாக அமைந்த நிலையில் பூஜை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











