என்னாது, மறுபடியும் விஷால் 'அன்டர் அரஸ்ட்'டா?
சென்னை: விஷாலை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்க கட்டிடங்களுக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று அடம் பிடித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் கைதாகியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கைது
விஷாலை கைது செய்து போலீசார் அழைத்துச் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். சிலரோ இந்த விஷாலுக்கு அரஸ்ட் ஆவதே வேலையாப் போச்சு என்று விமர்சித்தனர்.

புகைப்படம்
விஷாலை யாரும் கைது செய்யவில்லை. அவர் நடித்து வரும் அயோக்யா படத்தின் ஒரு காட்சி தான் அது. அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடியுள்ளனர். நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்த!

செட்
புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கி வரும் அயோக்யா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து வருகிறார். இருவரும் செட்டில் பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்ச்சை
அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் மது பாட்டில் வைத்திருந்ததால் சர்ச்சை கிளம்பியது. போலீஸ் அதிகாரியான தான் ஒரு வழக்கை விசாரிக்கும்போது கிடைக்கும் முக்கிய ஆதாரம் அது. படத்தை பார்க்கும்போது புரியும் என்று விஷால் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











