»   »  ஆர்யா எதை செய்ய பயந்தாரோ அதை துணிந்து செய்யும் விஷால்

ஆர்யா எதை செய்ய பயந்தாரோ அதை துணிந்து செய்யும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் விஷால் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

தமிழ் படங்களில் நடிப்பதுடன் தயாரித்தும் வருகிறார் விஷால். அவர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். மித்ரனின் இரும்புத் திரை படத்தில் நடிக்கிறார். அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கிறார்.

சண்டக்கோழி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

மலையாளம்

மலையாளம்

தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ள விஷால் தற்போது மலையாள திரையுலகிற்கு செல்கிறார். அவர் உன்னிக்கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

வில்லன்

வில்லன்

மோகன்லால் ஹீரோ என்றால் அப்போ விஷாலின் கதாபாத்திரம் என்னவென்று விசாரித்தால் வில்லன் என தெரிய வந்தது. ஆம், தனது ஹீரோ இமேஜை பொருட்படுத்தாது வில்லத்தனம் செய்ய உள்ளார்.

ஆர்யா

ஆர்யா

மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் இரும்புத் திரை படத்தில் அவருக்கு வில்லனாக அவரின் நண்பர் ஆர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் ஹீரோ இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் அவர் படத்தில் இருந்து வெளியேறினார்.

விஷால்

விஷால்

ஹீரோ இமேஜ் பாதிக்கக்கூடாது என்று வில்லனாக நடிக்க ஆர்யா மறுத்தார். ஆனால் விஷாலோ துணிந்து மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளது.

English summary
Arya opted out of Vishal's Irumbuthirai as he doesn't want to spoil his hero image by playing a baddie. But his good friend Vishal has now turned a villain for Mohanlal in his upcoming malayalam movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil