Just In
- 10 min ago
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- 1 hr ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 1 hr ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 2 hrs ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
Don't Miss!
- Sports
பந்தை எறிந்துவிட்டு.. கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!
- Finance
350 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டு வரும் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- News
இந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை!
- Automobiles
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குறும்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஷால்!
சென்னை: நடிகர் தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டுள்ள நடிகர் விஷால் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்க துப்பறிவாளன் பாகம் 2 இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் சக்ரா திரைப்படத்தை தொடர்ந்து தனது நண்பரும் நடிகருமான ஆர்யாவுடன் எனிமி என்ற படத்தில் நேருக்கு நேர் மோதி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கசிந்துள்ளது தகவலின்படி விஷால் தனது அடுத்த திரைப்படத்தில் பிரபல குறும்படத்தை இயக்கிய இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்து வேறுபாடு
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று அங்கும் பாக்ஸ் ஆபீசை கலக்கி வருகிறது. துப்பறிவாளன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது என இயக்குனர் மிஷ்கின் சொல்லி வந்த நிலையில் எதிர்பாராத சில கருத்து வேறுபாடு காரணமாக இப்பொழுது துப்பறிவாளன் பாகம்2 விஷாலே இயக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில்
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த விஷால் இப்பொழுது துப்பறிவாளன் பாகம்-2 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கும் நிலையில் இப்போதுள்ள லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் சக்ரா விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இருவரும் மோதிக் கொள்ள
திரைத்துறையில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் வெகு சிலரில் ஆர்யா மற்றும் விஷால் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில் இப்பொது முதன் முறையாக எதிரிகளாக மாறி எனிமி திரைப்படத்தில் இருவரும் மோதிக் கொள்ள படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு
சக்ரா, துப்பறிவாளன் 2, எனிமி ஆகிய திரைப்படங்கள் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த திரைப்படத்தின் தகவலும் இப்பொழுது கசிந்துள்ளது. எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி சமீபத்தில் அனைவரையும் கவர்ந்திருந்த குறும்பட இயக்குனர் சரவணா சொன்ன கதை விஷாலுக்கு பிடித்துப்போக ஓகே சொல்லி உள்ளதாகவும் விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.