பாண்டிய நாடு படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்!

By Shankar

சென்னை: பாண்டிய நாடு படப்பிடிப்பில் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் விஷால்.

பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் மகனான விஷால், செல்லமே படம் மூலம் ஹீரோவானார்.

சண்டக் கோழி படத்தில் முன்னணி நடிகராகிவிட்டார். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார். இவற்றில் பெரும்பாலானவை அவரது தந்தையின் ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரித்தவையே.

இப்போது தன் பெயரிலேயே புதிய பட நிறுவனமாக விஷாம் பிலிம் சர்க்யூட்டைத் தொடங்கியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாடிய விஷால் படங்கள்

பாண்டிய நாடு

பாண்டிய நாடு

இந்த ஆண்டு தொடர்ந்து சமர், பட்டத்துயானை ஆகிய இரு படங்கள் அவர் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றைத் தொடர்ந்து மதகஜராஜா அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் இப்போது பாண்டிய நாடு படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

36வது பிறந்த நாள்

36வது பிறந்த நாள்

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தனது 36வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார் விஷால். அவருக்கு இயக்குநர் சுசீந்திரன் பெரிய மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறினார்.

வரலட்சுமி

வரலட்சுமி

படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிய விஷாலுக்கு நடிகை வரலட்சுமி, நடிகர் விக்ராந்த், அவர் மனைவி, ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு, கேமராமேன் மதி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஷாலின் ரசிகர்களும் திரண்டு வந்து இந்த பிறந்த நாளில் கலந்து கொண்டனர். அவர்கள் விஷாலுக்கு மாலை அணிவித்து வாழ்த்தினர்.

வாழ்த்துகள் விஷால்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X