வரலெட்சுமியுடன் திருமணம் உறுதி! – விஷால் அறிவிப்பு
விஷால் வரலெட்சுமி காதல் கிசுகிசுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆயுசு ஆகிவிட்டது. 'இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். லிவிங் டூ கெதர். சரத்குமாருடனான விஷால் மோதலுக்கு இதுவும் ஒரு காரணம்' என்றெல்லாம் புகைந்தன.
எல்லாவற்றுக்கும் இன்றைய பேட்டி ஒன்றில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால்.

"வரலெட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன்," என்று அறிவித்திருக்கிறார்.
இதற்கு சரத்குமார் ரியாக்ஷன் என்னவோ...?
இது மட்டுமல்லாமல் அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தையும் குறி வைத்திருக்கிறாராம் விஷால்.
அடுத்த லைவ் ஷோவுக்கு ரெடியா சேனல்களே?
Comments


Click it and Unblock the Notifications