Vishal - இதுக்கு நான் ஸ்ரீரெட்டியை தடவியிருப்பேன்... மேடையில் சர்ச்சையாக பேசிய விஷால்.. ரசிகர்கள் கண்டனம்

சென்னை: Vishal (விஷால்) ஸ்ரீரெட்டியை தடவியிருப்பேன். என விஷால் ஒரு மேடையில் பேசியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்.

Vishal Controversy Speaks about Actress Sri Reddy

இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட் படம் எது என்று கேட்டால் அவருக்கே நியாபகம் இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் அந்த நிலையை அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படம் மாற்றியிருக்கிறது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது. வசூலும் நூறு கோடி ரூபாய்வரை சென்றிருப்பதாக கூறப்பட்டது. இதன் காரணமாக விஷால் கரியரில் அவரே எதிர்பார்க்காத வெற்றி மார்க் ஆண்டனி மூலம் கிடைத்திருக்கிறது.

ஹரி படம்: மார்க் ஆண்டனி படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்க விஷால் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்துவருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஸ்ரீரெட்டி சர்ச்சை: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி சில நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், அர்ஜுன் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய அவர் விஷால் மீதும் அதே குற்றச்சாட்டை வைத்தார். அவர் வைத்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

விஷாலுக்கு கண்டனம்: இந்நிலையில் விஷால் மேடையில் பேசிய ஒரு விஷயத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதாவது தனியார் யூட்யூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷாலின் கண்களை கட்டிவிட்டு அவர் முன் ஓணான் ஒன்று வைக்கப்பட்டது. அதை அவர் தொட்டு பார்த்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

அவரும் டாஸ்க்கின்படி செய்துவிட்டு அது என்ன உயிரினம் என்பதை கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து அவரது கண்களுக்கு போடப்பட்ட கட்டு அவிழ்க்கப்பட்டவுடன் ஓனானை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார் விஷால். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், இதை நான் தடவியதற்கு ஸ்ரீரெட்டியையே தடவியிருப்பேன் என அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டு வைத்ததில் தப்பே இல்லை. விஷாலுக்குள் அப்படி ஒரு எண்ணம் இருந்ததால்தான் ஸ்ரீரெட்டியை தடவியிருப்பேன் என கூறியிருக்கிறார். ஒரு ஹீரோவாக இருந்துகொண்டு பொதுமேடையில் இப்படியா பேசுவது என கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்ர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X