ஃப்ரிட்ஜில் வைத்ததுபோல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார்.. அவருக்காக அழுதேன்.. வரலட்சுமி பற்றி விஷால் எமோஷனல்
சென்னை: விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. 13 வருடங்கள் கழித்து அந்தப் படம் ரிலீஸானாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. இதனால் விஷாலும் படக்குழுவினரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் வெற்றியடைந்ததை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் விஷால் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஷால் நடிப்பில் கடந்த வருடம் மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. அந்தப் படங்களில் மார்க் ஆண்டனி மெகா ஹிட்டாகவும், ரத்னம் சுமார் ஹிட்டாகவும் அமைந்தது. ரத்னம் சுமாராக போனாலும் மார்க் ஆண்டனி அவரது சினிமா கரியரில் முதன்முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது. இதன் காரணமாக அவரும், அவரது ரசிகர்களும் செம மகிழ்ச்சியில் இருந்தார்கள். மேலும் மார்க் ஆண்டனி 2விலும் நடிக்கவிருக்கிறார் அவர்.

மதகஜராஜா: இதற்கிடையே 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். எந்தவித பிரச்னையும் இல்லாமல் படத்தின் ஷூட்டிங் முடிந்தது. ஆனால் படத்தில் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போனது. இப்போ ஆகிவிடும் அப்போ ஆகிவிடும் என்று கூறப்பட்டாலும் வருட கணக்காகியும் ரிலீஸாகவில்லை.
பொங்கல் ரிலீஸ்: பலர் மதகஜராஜா படத்தை மறந்தே போய்விட்டார்கள். நிலைமை இப்படி இருக்க ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இந்தப் பொங்கலையொட்டி படமானது ரிலீஸானது. பல வருடங்கள் கழித்து படம் ரிலீஸாவதால் இந்தக் காலத்துக்கு கனெக்ட் ஆகுமா இல்லை அவுட்டேட்டடாக இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ஒருதரப்பினர் சுந்தர்.சி படம் என்பதால் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்று ரொம்பவே உறுதியாக தெரிவித்தார்கள்.
மெகா ஹிட்: அவர்கள் கணித்தபடியே படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. படத்தில் ஆக்ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே பக்காவாக இருந்தது. அதிலும் மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளுக்கு எல்லாம் தியேட்டர்களில் க்ளாப்ஸ் பறந்தன. பல இடங்களில் வேறு படங்களை தூக்கிவிட்டு தியேட்டர்களில் மதகஜராஜா படத்தை திரையிட்டுவருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

விஷால் பேச்சு: இந்நிலையில் மதகஜராஜா மெகா ஹிட்டானதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் விஷால், சுந்தர்.சி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய நடிகர் விஷால், "வரலட்சுமி இத்தனை வருடங்களில் எனக்கு கிடைத்த அன்பான தோழி. ஃப்ரிட்ஜில் வைத்ததுபோல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ஒரே ஒரு படம்தான் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். ஆனால் கல்லூரியில் படித்த நண்பர்கள்போல் நாங்கள் பழகுவோம்.
முதன்முறையாக அழுதேன்: நான் பல பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் மட்டும் என்னிடம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று, ''எதையும் கடந்து சென்றுவிடலாம்'' என்று எனக்கு நானே பேசி தைரியம் ஊட்டிக்கொள்வேன். ஆனால் முதன்முறையாக நான் கண் கலங்கியது என்றால் ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சிக்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டலை பார்த்துதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











