நாடக நிறுவனம் தொடங்கினார் விஷால்.. வரலட்சுமிக்கு முக்கியப் பங்கு!
புதிய தயாரிப்பு நிறுவனம், ஆடியோ கம்பெனி தொடங்கிய நடிகர் விஷால், அடுத்து தொடங்கப் போவது மேடை நாடகத் தயாரிப்பு நிறுவனம்.
தனது முதல் நாடகத் தயாரிப்பை தி ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்.
முதல் நாடகத்துக்கு சிகாகோ - தி மியூசிகல் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதுவரை பார்த்திராத வகையில் பிரமாண்டமாகவும் வண்ணமயமாகவும் இந்த நாடகத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நாடகத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகிறவர் யுவன் சங்கர் ராஜா.
சர்வதேச அளவில் நாடகத் துறையில் புகழ்பெற்ற ஜெப்ரி வார்டன் இந்த நாடகத்துக்கு நடனம் அமைத்துக் கொடுக்கிறார்.
இந்த நாடகத்தில் முக்கியப் பங்கு வகிக்கவிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் இந்த நாடகம் நடக்கவிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications