வரிசையாக இரண்டு ஹிட்டுகள்.. சம்பளத்தை உயர்த்திட்டாரா விஷால்.. காட்டில் மழைதான்

சென்னை: விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சக்கட்டத்தில் ரசிகர்களிடம் இருந்தது. சூழல் இப்படி இருக்க படமானது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Vishal Increased His Salary Due To Ratnam Movie Hit

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்

ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாசிட்டிவ் ரிசல்ட்: அந்த எதிர்பார்ப்போடு சில நாட்களுக்கு முன்பு ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதிலும் படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று கூறும் ரசிகர்கள்; நிச்சயம் இந்தப் படம் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுவிடும் என்று கூறிவருகின்றார்கள்.

சம்பளத்தை உயர்த்திய விஷால்: இதற்கு முன்னர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் விஷால் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக பேச்சு எழுந்தது. அதாவது ரத்னம் படத்துக்காக ஒரு கோடி ரூபாய் அதிகமாகவே உயர்த்தினார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ரத்னம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் மீண்டும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி 5.5 கோடி ரூபாய் ரத்னத்துக்காக விஷால் சம்பளமாக வாங்கினார். அடுத்த படத்தில் 6.5 கோடி ரூபாய் வாங்குவதற்கு அவர் பிளான் செய்திருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X