சுசீந்திரனின் ஜீவா படத்தை வெளியிடும் விஷால்!
சுசீந்திரன் இயக்கும் ஜீவா படத்தை நடிகர் விஷால் தனது சொந்தப்பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
பாண்டிய நாடு' படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கி வரும் புதிய படம் ‘ஜீவா'. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடி குழு ஹீரோவும் விஷ்ணுதான்.

சுசீந்திரனுடன் மீண்டும் கைகோர்த்துள்ள விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மேலும், சூரி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாண்டியநாடு' படத்தை விஷால் தயாரித்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் 26-ந் தேதி படத்தை வெளியிடவுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் படத்தில் விஷால்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











