ஆந்திரா பெண்ணை மணக்கும் விஷால்: அப்போ வரலட்சுமியுடனான காதல்?
சென்னை: விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். வரலட்சுமி போட்ட ட்வீட்டால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது.
பின்னர் இருவரும் ராசியாகிவிட்டார்கள்.

வரலட்சுமி
விஷால் வரலட்சுமி சரத்குமாரை தனது உயிர் என்று எல்லாம் பப்ளிக்காக கூறினார். வரலட்சுமியோ காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மறுக்கவும் இல்லை. சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் என்று விஷால் தீர்மானமாக இருந்தார். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

பெண்
சங்க கட்டிட பணி கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு அவர் வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார்களாம். ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை பிடித்துப் போய்விட்டதாம். அனிஷா என்கிற அந்த பெண்ணையே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம் பெற்றோர்.

காதல்
விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம். ஆந்திரா பெண் என்றால் அப்பொழுது வரலட்சுமி சரத்குமாரின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவருக்கும் இடையே பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் விஷாலுக்கு வேறு பெண்ணை பார்த்துள்ளனர்.

படம்
வரலட்சுமிக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. நேற்று கூட அவருக்கு திருமணம் என்று யாரோ கூற அம்மணி கொந்தளித்துவிட்டார். நான் திருமணம் செய்யவில்லை, இங்கு தான் இருப்பேன், சினிமா படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











