முதலமைச்சர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய விஷால்.. 3 மாணவிகளின் படிப்பு.. சூப்பர்!

சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், தனது வழக்கமான பாணியில் அவருக்கு நற்பண்பு நிறைந்த விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

நடிகர் விஷால் தனது 'தேவி அறக்கட்டளை' மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான ஏழை எளிய மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவிக்கரங்களை நீட்டி வருகிறார். பொதுவாக, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலோ அல்லது முக்கிய நபர்களைச் சந்திக்கும் போதோ வழங்கப்படும் வழக்கமான பொன்னாடை மற்றும் பூங்கொத்துகளை அவர் தவிர்த்து வருகிறார். அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரிலேயே ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Vishal meets CM Vijay and honoured him with 3 Underprivileged Students Education

அந்த வகையில், அண்மையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், அவருக்கு அளிக்கும் பரிசாக, முதல்வரின் பெயரிலேயே கல்வி பயில வழியற்ற மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மூன்று மாணவிகளின் விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றையும் முதல்வர் ஜோசப் விஜய்யிடம் விஷால் நேரில் வழங்கினார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

"உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்கள் சேவையில் உங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்கள் மீதான நன்மதிப்பு மற்றும் பாராட்டின் அடையாளமாக, பின்தங்கிய சூழலில் உள்ள மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த நான் முடிவு செய்துள்ளேன்.

தற்காலிகமாக இருக்கும் ஒரு பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த எளிய முயற்சியை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கான உங்கள் பொதுப்பணியில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும், நல்வாழ்வும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று விஷால் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், விஷால் வழங்கிய கடிதத்தில் கல்வி உதவி பெறும் மாணவிகளின் பெயர், மதிப்பெண் மற்றும் அவர்கள் பயிலவிருக்கும் பட்டப்படிப்பு விவரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன:

மாணவியின் பெயர் பட்டப்படிப்பு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் குடும்பப் பின்னணி
எம்.லில்லி புஷ்பம் B.Sc (CS) 437 தனியொரு பெற்றோரைக் கொண்ட குடும்பம், முதலாம் தலைமுறை பட்டதாரி
பி.தர்ஷினி B.Com
எம்.ஹரினி BCA
431
399
தினக்கூலி பெற்றோர், முதலாம் தலைமுறை பட்டதாரி

நடிகர் விஷாலின் இந்த அர்த்தமுள்ள கல்விப் பரிசைப் பெற்றுக்கொண்ட முதல்வர் ஜோசப் விஜய், அவருக்கு நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், "உங்களின் இத்தகைய உன்னதமான சமூக சேவை முயற்சி தொடர்ந்து தொய்வின்றித் தொடரட்டும்" என மனதார வாழ்த்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X