Vishal Net Worth: ’அளவெடுத்து செஞ்ச ஆக்‌ஷன் ஹீரோ..’ விஷால் சம்பளம், நெட்வொர்த் இத்தனை கோடியா?

சென்னை: 2004ல் வெளியான செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள விஷால், இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையடுத்து விஷாலுக்கு திரை பிரலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என வலம் வரும் விஷாலின் சம்பளம், சொத்து மதிப்பு போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 Vishal Net Worth: Actor Vishals Salary, Net Worth, Assets and Car details

விஷாலின் நெட்வொர்த் எத்தனை கோடின்னு தெரியுமா?: 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த விஷால், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்தார். முக்கியமாக லிங்குசாமி இயக்கத்தில் விஷாலின் இரண்டாவது படமாக வெளியான 'சண்டக்கோழி', அவரது கேரியரையே உச்சம் கொண்டுபோனது.

அட்டகாசமான ஆக்‌ஷன் படமாக வெளியான சண்டக்கோழி, விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் செம்ம மாஸ் காட்டியது. இந்தப் படத்திலிருந்து ஆக்‌ஷன் ஜானரில் அதிகம் கவனம் செலுத்தினார் விஷால். அவரது உயரமும், உடற்கட்டும் ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு என அளவெடுத்து செய்ததை போன்று இருந்ததால், விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் என மேலும் சில படங்கள் விஷால் கேரியரில் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ள விஷால், தற்போது துப்பறிவாளன் 2ம் பாகத்தின் இயக்குநராகவும் மாறிவிட்டார். இதுதவிர ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்நிலையில், விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விஷாலின் சம்பளம், சொத்து விவரங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதன்படி விஷால் ஒரு படத்துக்கு 11 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் மாதம் 3 கோடியும், ஆண்டுக்கு 25 கோடி வரையும் வருமானம் கிடைக்கிறதாம்.

அதேபோல், விஷாலின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. சென்னை, ஹைதராபாத் நகரங்களில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் விஷால், இன்னும் பல இடங்களிலும் சொத்துகளை வாங்கி வைத்துள்ளாராம். அதேபோல், சுமார் 76 லட்சம் மதிப்புடைய BMW X5, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான Toyota Fortuner, Jaguar XF Rs போன்ற கார்களை சொந்தமாக வைத்துள்ளார். விஷாலின் கனவு கார் 4 கோடி ரூபாய் மார்ட்டின் என்பதும், விரைவில் அதனை வாங்கியே தீருவேன் என அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X