வரலட்சுமி நிச்சயதார்த்தம்.. மெய் சிலிர்த்து பார்த்தேன்.. மனம் திறந்த விஷால்

சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறா விஷால்.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

Vishal Open Talks about Varalaxmi Encagement and her Carreer

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்

அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

நோ திருமணம்: விஷாலுக்கு 40 வயது நெருங்கிவிட்டது. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இடையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் அவருக்கு நடந்தது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. மேலும் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையே அவர் தன்னால் முடிந்த உதவிகளை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு செய்வதுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் களமிறங்கவும் இருக்கிறார்.

விஷால் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'வரலட்சுமியை நினைத்து நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். அவருக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் அமைந்திருக்கிறது. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கதாபாத்திரத்துக்கு பிறகு ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் கேரக்டரை மெய் சிலிர்த்து பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவரை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அவருடைய கரியரை தாண்டி அடுத்த லெவலுக்கு அவரின் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்" என்றார்,

கிசுகிசு: முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு விஷாலும், வரலட்சுமியும் காதலித்துவந்ததாகவும்; திடீரென அவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது. இப்போது வரலட்சுமி நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X