‘ஆம்பள’ படத்திற்காக பச்சை குத்திக் கொண்ட கொண்ட விஷால்!
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் ஆம்பள படத்திற்காக தனது தோளில் பெரிய டாட்டூ குத்தியுள்ளார் நடிகர் விஷால்.
ஏற்கனவே, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகதராஜா இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில், அரண்மனைப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஷாலுடன் சேர்ந்துள்ளார் சுந்தர்.சி.
இப்படத்திற்கு ஆம்பள எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலின் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

3 அத்தை...
படத்தின் கதைப்படி, ஹீரோ விஷாலுக்கு மூன்று அத்தைகளாம். ஒவ்வொரு அத்தைக்கும் ஒரு மகள் என விஷாலுக்கு மூன்று அத்தை மகள்கள்.

ரம்யா கிருஷ்ணனின் மகள்...
விஷாலின் மூன்று அழகிய அத்தைகளாக ரம்யாகிருஷ்ணன், ஐஸ்வர்யா மற்றும் கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரம்யா கிருஷ்ணனின் மகளாக வருகிறார் ஹன்சிகா.

தோளில் டாட்டூ...
இந்நிலையில், இப்படத்திற்காக விஷால் தன்னுடைய தோளில் பெரிய டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். பச்சை மற்றும் கருப்பு நிறத்திலான டாட்டூவை தனது வலதுபுற தோளில் வரைந்து கொண்டுள்ளார். டாட்டூ போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.

பூஜை...
இதற்கிடையே, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பூஜை' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











