'மிரட்டிட்டீங்க...': ஆர்கேவைப் பாராட்டிய விஷால்!!

By Shankar

Vishal
பாலாவின் அவன் இவன் படத்தில் தனக்கு வில்லனாக நடித்துள்ள ஆர்கே நடிப்பில் மிரட்டி விட்டதாக வெளிப்படையாக பாராட்டியுள்ளார் படத்தின் நாயகர்களில் ஒருவரான விஷால்.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது பாலாவின் அவன் இவன். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில், சன் பிக்ஸர்ஸ் வெளியீடாக வரும் இந்தப் படத்தில் வி்ஷால்-ஆர்யா நாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுக்கு இணையாக ஆர்கே, ஜிஎம் குமார் ஆகியோரும் படத்தில் கலக்கியிருக்கிறார்களாம்.

படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தைப் பார்த்த ஹீரோ விஷால், ஆர்கேவின் நடிப்பைப் பார்த்து அசந்து போய்விட்டாராம். உடனடியாக ஆர்கேவை அழைத்தவர், நேரில் அரைமணி நேரத்துக்கு மேல் அவர் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இன்றைய பிற்பகல் உணவை என்னோடுதான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். 'வாங்க சாப்பிடலாம்' என ஊருக்கே விருந்து பரிமாறினாலும், விஷாலின் அன்பான அழைப்பைத் தட்டாமல் ஏற்று, அவரை மகிழ்வித்திருக்கிறார் ஆர்கே.

அவன் இவனில் ஹீரோக்களுக்கு நிகரான வேடம் ஆர்கேவுக்கு. நாற்பது நாட்கள் கால்ஷீட்டில் நடித்து முடித்த அவரை, இறுதி நாளில் பாலாவே மனம் விட்டுப் பாராட்டியது நினைவிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X