காயத்துல இருந்து மீண்டாச்சு... அடுத்தது என்ன சூட்டிங்தான்... சூட்டிங்கிற்கு திரும்பிய விஷால்!
ஐதராபாத் : நடிகர் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் சமீபத்தில் வெளியானது.
இந்தப் படம் நினைத்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் அடுத்த படத்தில் கவனம் செலுத்தினார் விஷால்.
இதனிடையே அந்தப் படத்தின் சூட்டிங்கில் காயமடைந்து கேரளாவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷாலின் எனிமி படம் தீபாவளி ரிலீசாக வெளியானது. ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்த இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அண்ணாத்த படத்துடன் இணைந்து இந்தப் படமும் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

விஷாலின் வீரமே வாகை சூடும்
இந்நிலையில் அவரது அடுத்த படமான வீரமே வாகை சூடும் படமும் சமீபத்தில் வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் விஷாலுக்கு கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து லத்தி படத்தில் கவனம் செலுத்தினார் விஷால்.

லத்தி பட சூட்டிங்
படம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் க்ளைமாக்ஸ் காட்சி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. 30 நாட்கள் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே திட்டமிடப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், திட்டமிட்டிருந்த காட்சியில் கையில் குழந்தையுடன் விஷால் மேலிருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

சூட்டிங்கில் விஷால் காயம்
அதில் கான்கிரீட்டில் மோதி விஷாலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சூட்டிங்கை தொடர அவர் முயன்றார். ஆனால் காயம் அதிகமாக இருந்த நிலையில், கேரளாவில் ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டார் விஷால். இந்த சிகிச்சை 4 வாரங்கள் தொடர்ந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளார்.

சிகிச்சை முடிந்து திரும்பிய விஷால்
தொடர்ந்து லத்தி படத்தின் சூட்டிங் நாளை தொடங்கவுள்ளது. இதில் விஷால் பங்கேற்கிறார். இதையொட்டி அவரை விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் லத்தி படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











