Vishal: நடுராத்திரியில் நியூயார்க் நகரில் பெண்ணுடன் அப்படி ஏன் ஓடுனேன் தெரியுமா?.. விஷால் விளக்கம்!
சென்னை: நடிகர் விஷால் நியூயார்க் நகரில் நடுராத்திரியில் இளம் பெண் ஒருவருடன் கேஷுவலாக நடந்து சென்றதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுப்பதை உஷாராக கவனித்த விஷால் உடனே அங்கிருந்து முகத்தை மூடிக் கொண்டு ஓடியோ வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தற்போது அந்த வீடியோவுக்கு நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து சொதப்பி வந்த விஷால் இந்த ஆண்டு மார்க் ஆண்டனி படம் மூலம் வெற்றியை ருசித்தார். 100 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டியதாக அவரே கூறினார். ஹரி இயக்கத்தில் ரத்னம் எனும் படத்தில் நடித்து வரும் விஷால் புத்தாண்டு விடுமுறையை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாடி வருகிறார்.

நின்று போன திருமணம்: நடிகர் விஷால் லக்ஷ்மி மேனன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர், வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என பேசப்பட்டார். திடீரென தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியாமல் நின்று போனது. நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் கூறி வந்தார்.
நடுராத்திரியில் இளம் பெண்ணுடன்: அமெரிக்காவின்ல் ஆறடி காத்தாக ஆம்பள விஷால் இளம் பெண் ஒருவருடன் நடுராத்திரி நடந்து சென்றுக் கொண்டிருக்கும் வீடியோவில் திடீரென அவர் வீடியோ எடுப்பதை பார்த்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு தப்பி ஓடுவது போல ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
ஓவர் ஆக்டிங்: அந்த வீடியோவை பார்க்கும் போதே அது ஒரு பிராங்க் தான் என்றும் விஷாலின் ஓவர் ஆக்டிங் நடிப்பு இதிலும் பளிச்சென பல் இளித்து நிற்கிறது என நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், அந்த வீடியோ குறித்து விஷாலே விளக்கம் அளித்துள்ளார்.
மன்னிச்சிடுங்க மக்களே: சும்மா இந்த கிறிஸ்துமஸ்க்கு என்னை வைத்து என் மச்சான்கள் விளையாடிய பிராங்க் விளையாட்டு. அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்குள் இருந்த குழந்தைத் தனம் கொஞ்சம் சொந்தங்களுடன் இணைந்த போது எட்டிப் பார்த்தது. அது பக்காவான ஒரு பிராங்க் வீடியோ என்றும் தன்னை பற்றி தவறாக பேசியவர்களையும் தப்பா எடுத்துக்கல, மன்னிச்சுடுங்க மக்களே என விளக்கம் அளித்துள்ளார் விஷால்.
அந்த பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லையே: விஷால் தனது கசின்ஸ் உடன் விளையாடிய பிராங்க் விளையாட்டு என்று விளக்கம் அளித்துள்ள நிலையில், கடைசி வரைக்கும் கூட இருந்த பெண் யாருன்னு சொல்லவே இல்லையே விஷால், நாங்க கூட உங்க அடுத்த படத்துக்கான புரமோஷன்னு தான் நினைச்சோம். ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











